மேலும் அறிய
TN Roundup: காலி சேர்களுடன் பாஜக மாநாடு, வேலையை தொடங்கும் திமுக, ஈபிஎஸ் அட்டாக் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்
Source : ABP
- சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மதியம் 2.30 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
- "கமல் பேசுவது எஙகளுககுப புரியவில்லை என சிலர் சொல்வார்கள்.
அவர்களுக்குப் புரியாமல் இல்லை, புரிந்துகொள்ளக் கூடாது என நினைக்கிறார்கள்”
-மதுரையில் நேற்று நடந்த மநீம கட்சி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - முழு நேர டிஜிபி நியமிக்கப்படாததால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது - அம்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
- தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.22) டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பிரதானத் தேர்வு
மாநிலம் முழுவதும் 47 மையங்களில் நடைபெறும் பொது அறிவுத் தேர்வு; 1,082 தேர்வர்கள் பங்கேற்பு; மின்னணு பொருட்கள் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தல்
- முழு நேர டிஜிபி நியமிக்கப்படாததால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது - அம்பத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
- சென்னை: வேலை செய்த கொரியர் நிறுவனத்திற்கு வரும் பார்சல்களைக் குறி வைத்து 1 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஊழியர் உட்பட இருவர் கைது
- சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா சிக்கியது
- ஈரோடு: குமாரபாளையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஜெயக்குமார் (48) என்பவர் உயிரிழந்த நிலையில், சரக்கு வாகன ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்
- நெல்லை: கூட்டமே இல்லாமல் காலியாக கிடந்த நாற்காலிகளுடன் நடைபெற்ற பாஜக சிறுபான்மையினர் மாநில மாநாடு! சொந்தத் தொகுதியில் நடைபெற்ற மாநாட்டில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கவில்லை
- "அன்றைக்கு ரூ.1,000 கொடுக்க முடியாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி அதே வாயால் இன்று ரூ.2000 அறிவிப்பது எப்படி..?" - சென்னை தண்டையார்ப்பேட்டையில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி பேச்சு
- IAS, IPS, IFS உள்ளிட்ட இந்தியாவின் உயர் பதவி நியமனங்களில் இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படாமல் உயர் சாதியினர்களை அதிகம் நியமிப்பதைக் கண்டித்து சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன், மார்ச் 3ம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
- தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கப் பதவிகளுக்கான தேர்தல் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடைபெறுகிறது!
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















