மேலும் அறிய

சாலை தடுப்புச் சுவர் கட்ட ரூ. 11 லட்சம் லஞ்சம்.. தொக்காக மாட்டிய பாஜக எம்.எல்.ஏ. கைது!

சிறு நீர்ப்பாசனத் துறையின் கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்காக ஷிராஹட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ சந்திரு லமானி ஒப்பந்தத்தாரரிடம் ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

கர்நாடகாவில் நீர்ப்பாசனத் திட்டத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கியதாக பாஜக எம்.எல்.ஏ., மற்றும் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடக் மாவட்டம் சின்சலியை சேர்ந்த ஒப்பந்ததாரர் விஜய் புஜார் என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பாஜக எம்எல்ஏ சந்திரு லமானி மற்றும் அவரது இரண்டு உதவியாளர்களான மஞ்சுநாத் வால்மீகி மற்றும் குருநாயக் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்எல்ஏ சந்திரு லமானி ஷிராஹட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவர். 

அவரது தொகுதியில் சிறு நீர்ப்பாசனத் துறையின் கீழ் கால்வாய் செல்லும் பகுதியில் உள்ள சாலையின் இருபக்கமும் தடுப்புச் சுவர்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சந்திரு லமானி ஒப்பந்ததாரரிடம் ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்திரு லமானி மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா சட்டத்தின் கீழ் பாஜக எம்.எல்.ஏ., சந்திரு லமானி மற்றும் உதவியாளர்கள் இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் - துணை முதல்வர் கடும் விமர்சனம்

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, “லோக்ஆயுக்தா சட்டத்தின் மூலம் சந்திரு லமானி மாட்டிக் கொண்டுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?. மற்றவர்கள் மீது ஊழல் மற்றும் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகளை சுமத்துவது எளிது. ஆனால் இப்போது ஒரு பாஜக எம்எல்ஏவே பிடிபட்டுள்ளார். இதற்கு பாஜக தலைவர்கள் பதிலளிக்க வேண்டும் என காட்டமாக பதிலளித்துள்ளார். லோக்ஆயுக்தா ஆணையம் நடத்தும் விசாரணையை  நாங்கள் எந்த வகையிலும் தடுக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். 

இதேபோல் இந்த சம்பவம் பற்றி பதிலளித்த துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், “பாஜக தலைவர்கள் மிகவும் நேர்மையானவர்கள். அவர்கள் இந்த நாட்டில் ஊழல் இல்லாதவர்கள். லோக்ஆயுக்தாவுக்கு சில தவறான தகவல்கள் கிடைத்திருக்கலாம்” என கிண்டலாக பதிலளித்துள்ளார். 

ஆனால் பாஜக எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மைகள் பற்றி தகவல்களை உறுதி செய்த பிறகு பதிலளிப்பதாக கர்நாடகா மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா  தெரிவித்துள்ளார். அதேசமயம் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் அசோக் கவுடா கூறுகையில், “காங்கிரஸ் ஆட்சியில் பெரிய அளவிலான ஊழல் நடப்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை  குறிவைத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் எம்.எல்.ஏ., சந்திரு லமானியின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தலைப்பு செய்திகள்

Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Alto K10 on EMI: வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
வெறும் ரூ.50,000 முன்பணம் போதும், ஆல்டோ கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்; EMI எவ்வளவு தெரியுமா.?
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Embed widget