மேலும் அறிய
Advertisement
PONNIYIN SELVAN: பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு குட்நியூஸ்.. பூங்குழலியின் வீடியோ பாடல் நாளை வெளியீடு
பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள அலைகடல் படலின் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அடிப்படையாக கொண்டு, மணிரத்தினம் இயக்கிய திரைப்படத்தின் முதல் பாகம் அண்மையில் வெளியானது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி என, பெரும் நடிகர் பட்டாளமே அப்படத்தில் நடித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில், கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. பிரமாண்ட காட்சிகளுடன், மணிரத்தினத்தின் நேர்த்தியான திரைக்கதையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிய, உலக அளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம், ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து தமிழ் சினிமா வசூலில் புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.
Ready to feel the magic of #Alaikadal?
— Lyca Productions (@LycaProductions) November 24, 2022
Video song from tomorrow🤩#PS1 #PonniyinSelvan1 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @Karthi_Offl #AishwaryaLekshmi
🎙️ @AntaraNandy
✒️ @bagapath pic.twitter.com/ZPHO4Tjiws
இந்நிலையில், முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள அலை கடல் எனும் பாடலின் வீடியோ நாளை கலை 11 மணிக்கு வெளியாகும் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா லட்சுமி நடித்த பூங்குழலி கதாபாத்திரம் அறிமுகமாகும் பாடல் இதுவென்பதால், லைகா நிறுவனத்தின் அறிவிப்பு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற தேவராளன் ஆட்டம் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion