Pisasu 2: நிர்வாணக்காட்சியே இல்ல.. ஆனாலும் ‘ஏ’ சான்றிதழ்.. அதிர்ச்சியில் பிசாசு 2 படக்குழு?
Pisasu 2: நிர்வாணக்காட்சியே இல்ல.. ஆனாலும் ‘ஏ’ சான்றிதழ்.. அதிர்ச்சியில் பிசாசு 2 படக்குழு?
![Pisasu 2: நிர்வாணக்காட்சியே இல்ல.. ஆனாலும் ‘ஏ’ சான்றிதழ்.. அதிர்ச்சியில் பிசாசு 2 படக்குழு? Pisasu 2 Censor Board only Ready to give A Certificate Mysskin and Crew Shocked Pisasu 2: நிர்வாணக்காட்சியே இல்ல.. ஆனாலும் ‘ஏ’ சான்றிதழ்.. அதிர்ச்சியில் பிசாசு 2 படக்குழு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/29/799fdf6d5e206b662b3458e7a2a53a8d1661778321420175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மிஷ்கின் இயக்கியுள்ள ‘பிசாசு 2’ படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பிசாசு 2’ படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு படத்தில் பயமுறுத்தும் மற்றும் வன்முறை சார்ந்த காட்சிகள் இருப்பதாக கூறி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்தான் கொடுக்கமுடியும் என்று தெரிவித்துள்ளதாகவும், இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக ஆண்ட்ரியா நிர்வாண சம்பந்தமான காட்சி எடுக்கப்படவில்லை என மிஷ்கின் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
பாலா தயாரிப்பில் வெளியான பிசாசு 1 பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் பிசாசு பாகம் 2 பட வேலைகளில் இறங்கினார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்க, அவருடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
ராக்ஃபோர்ட் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அப்படத்தின் டீசரும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து ‘உச்சந்தலை ரேகையிலே’ ‘ நெஞ்சே கேளு’ ஆகிய இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டன.
View this post on Instagram
முன்னதாக, இப்படத்தில் தான் நிர்வாணமாக நடித்ததாகவும் கதைக்கு தேவை என்பதால் ஒரு காட்சியில் அப்படி நடிக்க வேண்டி இருந்ததாகவும் ஏற்கெனவே பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆண்ட்ரியா. முதலில் தயக்கம் இருந்ததாகவும், பின்னர் கட்டாயப்படுத்தினார்கள், கதைக்கும் தேவை என்பதால் நடித்தேன். அதில் வருத்தமில்லை என்றார். இது குறித்து பேசிய மிஸ்கினும் கதைக்கு தேவை என்பதால் ஆண்ட்ரியா ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்தார் என்றார்.
இந்நிலையில் பிசாசு 2 படத்தில் இருந்து ஆண்ட்ரியாவின் நிர்வாணக்காட்சி நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அந்த நிர்வாணக்காட்சி ஏன் நீக்கப்பட்டது என்பது குறித்து இயக்குநர் மிஷ்கின் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில், “ பிசாசு 2 படத்திற்காக திட்டமிடப்பட்டிருந்த நிர்வாண காட்சிகள் படமாக்கப்படவில்லை. எனக்கும் ஆண்ட்ரியாவுக்கும் பொதுவான நண்பரும்,புகைப்படக்கலைஞருமான ஒருவர் தான் அந்தப்புகைப்படங்களை எடுத்தார்.
நான் அந்தப்புகைப்படங்களை கூட பார்க்க வில்லை. ‘பிசாசு 2’ படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சிகள் படத்தில் இடம்பெறும் பட்சத்தில் தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கும். அதனால் இந்தப்படத்தை குழந்தைகள் பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் அந்தக்காட்சியை நான் நீக்கிவிட்டேன்” என்று பேசினார். இந்தப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)