Watch Video: அலியாவை மோத வந்த மரக்கிளை.. காப்பாற்றிய போட்டோகிராபர்.! விளம்பர நிகழ்ச்சியில் பரபர சம்பவம்!
'கங்குபாய் கதியாவாடி' படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளிலும், படத்தின் ப்ரொமோஷன் வேலையிலும் அலியா ஈடுபட்டுள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'கங்குபாய் கதியாவாடி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட முக்கியப் பணிகள் முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படமானது ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியது. ஆனால் பிப்ரவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
View this post on Instagram
25 ஆண்டுகால திரைப்பயணத்தை முடித்திருக்கும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்தாவது படம் கங்குபாய் கத்தியவாடி ஆகும். இந்தப் படத்தை அவரே தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படமானது 72-ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. கங்குபாய் கத்தியவாடியில் அலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளிலும், படத்தின் ப்ரொமோஷன் வேலையிலும் அலியா ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இந்தியா முழுவதுமே அவர் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் மும்பையில் மேற்கூரை இல்லாத ஓபன் பஸ்ஸில் அமர்ந்து ரசிகர்களை சந்தித்தார் அலியா.
View this post on Instagram
அப்போது அருகேயுள்ள மரக்கிளை ஒன்று அலியா மீது மோதுமாறு வர அங்கே நின்ற போட்டோகிராபர் ஒருவர் மரக்கிளையைப் பிடித்து அலியாவைக் காப்பாற்றினார். மரக்கிளை மோத வந்ததும் புடைவையால் தலையை மூடி அலியா உஷாரான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.