நண்பர்களாக தொடர்வோம்... காதலன் ரோஹ்மனை பிரிந்தார் சுஷ்மிதா சென்..
46 வயதாகும் சுஷ்மிதா சென், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், தனது ரசிகரான ரோஹ்மான் ஷால் என்பவரை காதலித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
ரோஹ்மன் ஷால் உடனான பிரிவினையை அறிவித்த பிறகு, 'அமைதிதான் அழகானது' என்று நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், 1994ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். அதன்பிறகு, பாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ரட்சகன், முதல்வன் படங்களிலும் நடித்துள்ளார்.
46 வயதாகும் சுஷ்மிதா சென், திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், தனது ரசிகரான ரோஹ்மான் ஷால் என்பவரை காதலித்து அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். சுஷ்மிதாவை விட ஷால் 15 வயது குறைந்தவர் ஆவார்.
முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா 2000 ஆம் ஆண்டில் ரெனியையும், 2010 ஆம் ஆண்டில் அலிசாவையும் தத்தெடுத்தார். அவர் தனது குடும்பத்தினருடன் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டு வந்தார். சுஷ்மிதா ரோஹ்மான் மற்றும் தனது இரண்டு பிள்ளைகளுடன் ஒன்றாக வசித்து வந்தார்.
இந்த நிலையில், ரோஹ்மான் - சுஷ்மிதாவின் காதல் முறிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, சுஷ்மிதா ரோஷ்மானுடன் இனி உறவில் இல்லை என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். ரோஹ்மானுடனான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் தொடர்ந்து நண்பர்களாக இருப்பதாகக் கூறினார்.
அவரது பதிவில், “நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம், நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்!! உறவு நீண்ட காலமாக முடிந்தது...காதல் உள்ளது” என்று கூறினார். இந்த ஜோடி பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
சுஷ்மிதா சென் ரோஹ்மான் ஷால் உடனான பிரிவினையை உறுதிப்படுத்திய பிறகு , 'அமைதிதான் அழகு' என்று இன்ஸ்டாவில் எழுதியுள்ளார். மாடல் ரோஹ்மான் ஷால் உடனான பிரிவை உறுதி செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, 'அமைதிதான் அழகானது' என்று சுஷ்மிதா சென் கூறினார்.
View this post on Instagram
அவரது பதிவிற்கு ரசிகர்கள் பல கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். ஒரு ரசிகர் எழுதினார், "நாங்கள் அனைவரும் அன்றாடம் வாழும் குழப்பங்களுக்கு மத்தியில் அமைதி அழகாக இருக்கிறது என்று நீங்கள் கூறும்போது, உங்கள் உள் அமைதிதான் உங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது சுஷ்மிதா” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்