மேலும் அறிய

Nayanthara Bday Documentary: லேடி சூப்பர் ஸ்டாரின் 40வது பிறந்தநாள்..! வெளியானது நயன்தாரா - Beyond The Fairy Tale திருமண ஆவணப்படம்

Nayanthara Bday Documentary: நயன்தாராவின் 40வது பிறந்தநாளை ஒட்டி, அவரது திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

Nayanthara Bday Documentary: திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் 40வது பிறந்தநாள்:

கேரளாவில் பிறந்து தமிழ்மொழி வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து நாடு முழுவதும் பிரபலமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். பக்கத்துவீட்டு பெண் தொடங்கி, அதிரடியான காவல்துறை அதிகாரி வரை, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இந்நிலையில், நயன்தாரா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். அதோடு, பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

நயன்தாரா - Beyond The Fairy Tale

நயன்தாரா - Beyond The Fairy Tale என்ற தலைப்பில் அவரது திருமண ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில், நயன்தாராவின் காதல் வாழ்க்கை, தனிப்பட்ட நிகழ்வுகள், அன்பு நிறைந்த திருமண தருணங்கள் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றி விரிவாக காட்டப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற்றது. அதைதொடர்ந்து, அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் இவர்களது திருமணம் தொடர்பான டீசரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டியது.

2 ஆண்டுகள் தாமதம்:

விக்னேஷ் சிவன் நடிப்பில் உருவான நானும் ரௌவுடி தான் படத்தில் நயன்தாரா நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர்கள், ஏராளமான திரை நட்சத்திரங்கள் முன்னிலையில் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமண நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருந்தனர். அதில் நானும் ரௌவுடி தான் திரைப்படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த அனுமதி கோரி இருந்தனர். ஆனால், அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி வழங்காததால், அவரை விமர்சித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு, உயிர் மற்றும் உலகு என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தான், திருமணமான 2 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் கழித்து, நயன்தாரா - Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் பெருமிதம்:

இந்த ஆவணப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகையில் “நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரிடேல் படத்தின் நோக்கம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் ஆன்மாக்கள் ஒருவரையொருவர் எப்படிக் கண்டுபிடித்தன, அவர்கள் எப்படி ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள், எப்படித் தயாராகிறார்கள் என்று பார்வையாளர்களை ஒரு பயணத்தில் அழைத்துச் செல்வதுதான். அவர்களின் வாழ்வின் அடுத்த படி. இது ஒரு திருமணத்தின் கதையை விட மிக அதிகம் - இது இரண்டு அழகான நபர்கள் ஒன்றாக வாழ்க்கையை உருவாக்குவதற்கான ஒரு சிறப்புக் கதை, மேலும் இந்த கதையை ரசிகர்கள் ஒரு கண்ணோட்டத்தை எடுப்பதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது" என தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
TN Weather:இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
Chennai Weather: சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tambaram Theft CCTV : 20 சவரன்..திருட்டு பைக்..பெண் போலீசிடம் கைவரிசை!திக்..திக்..CCTV காட்சிகள்Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..Arvind Kejriwal Car Attack : ’’பாஜகவின் கொலை முயற்சி!’’கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு! - ஆம் ஆத்மிCongres Tvk Alliance : விஜயை அழைத்த காங்கிரஸ்! நம்பிக்கையா? அவநம்பிக்கையா? பகீர் கிளப்பும் பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
எடிட்டிங்கா? பிரபாகரனுடன் இருக்கும் போட்டோ போலியா? தம்பிகளை ஏமாற்றினாரா சீமான்?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பரந்தூர் பறக்கும் விஜய்! நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
TN Weather:இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
இன்று இரவு சென்னை டூ குமரி வரை: 25 மாவட்டங்களில் மழை இருக்கு..
Chennai Weather: சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொல்வது என்ன?
Israel Hamas Ceasefire: டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
டிரம்ப்பா- பைடனா.? இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு யார் காரணம் ?
TN Weather: இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்: 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
குட் நியூஸ் மக்களே! இனி No Traffic; 100 கி.மீ. வேகத்தில் பறக்கலாம் ; ECR சாலையின் புதிய அப்டேட்
"காலம் மாறும்! பதில் சொல்லத் தயாரா இருங்க" அமைச்சர் சேகர்பாபுவிற்கு அண்ணாமலை கண்டனம்
Embed widget