NC 22 controversy : படப்பிடிப்பின்போது சர்ச்சையில் சிக்கிய நாக சைதன்யாவின் NC 22 .. என்ன காரணம்?
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் கிரித்தி ஷெட்டி நடிக்கும் NC 22 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் NC 22 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலுகோட் எனும் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மிக பிரமாண்டமான செட் போடப்பட்டு சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பை லிங்குவல் படம்:
ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கி வரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. நடிகர் ஜீவா இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகர் நாக சைதன்யாவுக்கு இது முதல் தமிழ் திரைப்படம் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இதுவாகும். இருவரும் இரண்டு மொழிகளில் பரஸ்பரம் அறிமுகமாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
முற்றுகையிட்ட கிராம மக்கள் :
NC 22 படப்பிடிப்பு சர்ச்சையில் சிக்கியதற்கு காரணம் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தின் அருகாமையில் ராய கோபுர கோயில் உள்ளது. அதனால் கிராம மக்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறுவதால் தினசரி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அங்கு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்துவது இடையூறாக இருப்பதாகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு கூறுகையில் படத்தின் தயாரிப்பாளர்கள் NC 22 படப்பிடிப்பிற்காக மண்டியா மாவட்டத்தின் DC அஷ்வினிடம் அனுமதி பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த அனுமதி இரண்டு நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#NC22 # UPDATE #
— satish (@ANRLegend) October 9, 2022
Shoot is currently in progress @ MELKOTE TEMPLE - KARNATAKA. pic.twitter.com/m23tIHgpDW
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் கிராம மக்கள் :
சினிமா வட்டாரங்களின் தகவலின் படி கிராம மக்கள் படப்பிடிப்பு யூனிட்டை தாக்கியுள்ளனர். அந்த சமயத்தில் படத்தின் ஹீரோ நாக சைதன்யா படப்பிடிப்பு தளத்தில் இருந்தார் என கூறப்படுகிறது. படக்குழுவினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் என தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரையில் வெளியாகவில்லை.
Actor #Jiiva has been roped in to play an important role in #NC22 Directed by #VenkatPrabhu starring #Nagachaitanya & #KrithiShetty pic.twitter.com/gmeNHQ78B3
— RJ Raja (@rajaduraikannan) October 7, 2022
இரண்டாவது முறையாக ஜோடி சேரும் சைதன்யா - கிரித்தி ஷெட்டி:
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலின்போது NC 22 படத்தின் கதாநாயகி கிரித்தி ஷெட்டி கூறுகையில், “"பங்கார ராஜு" திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக நான் நாக சைதன்யாவுடன் இணைந்து பணிபுரிவதில் மிக்க மகிழ்ச்சி. ஏற்கனவே நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளதால் அவருடன் திரையை பகிர்வது எவ்வளவு உற்சாகமானது என்பது எனக்கு தெரியும். அதனால் நான் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன். ரசிகர்களும் எங்களின் ஜோடியை விரும்புகிறார்கள். மக்களுக்காக நான் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்” என கூறினார்