ஆணவத்தில் பேசிய சல்மான் கான்..ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த ரஹ்மான்
நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சல்மான் கான் ரஹ்மானின் இசையை சுமார் என்று மேடையில் கூறியபோது கொஞ்சமும் தாமதிக்காமல் ரஹ்மான் சல்மான் கானுக்கு செம பதிலடி கொடுத்தார்

ஏ.ஆர் ரஹ்மான்
கடந்த 30 ஆண்டுகளாக் இசைத் துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான். இந்தியா தவிர்த்து உலகளவில் தலைசிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக ரஹ்மான் கருதப்படுகிறார். ரஹ்மான் இசையமைத்த காதலிக்க நேரமில்லை சமீபத்தில் வெளியாகியது. இப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்றைய தலைமுறையினர் வியக்கும் வகையில் புத்துணர்வாக இருந்தன. தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள தக் லைஃப், ஜெயம் ரவி நடித்துள்ள ஜீனி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் ரஹ்மான்
ரஹ்மான் இசை சுமார் என்ற சல்மான் கான்
ரஹ்மானின் இசை போல சுவாரஸ்யமான மற்றொரு விஷயம் அவருடைய சேட்டையான பதில்கள். அப்படியான ரஹ்மானின் இசையை சுமார் என்று பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். 2014 ஆம் ஆண்டு சினிமா நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கான் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் கலந்துகொண்டார்கள். அப்போது மேடையில் பேசிய சல்மான் கான் ரஹ்மானின் இசை சுமார் தான் என்று சொன்னார். பின் தன்னுடைய படங்களுக்கு இசையமைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு ரஹ்மான் செம பதிலடி ஒன்று கொடுத்தார்.
எப்போ எங்களுடன் சேர்ந்து பணியாற்ற போகிறீர்கள் என்று சல்மான் கான் கேட்டதற்கு ' அதற்கு எனக்கு பிடித்த மாதிரியான படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும்" என்று ரஹ்மான் சிரித்துக் கொண்டே பதிலளித்து சல்மானின் வாயடைத்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

