Actor Jai: ஒரே ஆண்டில் அதிக படங்கள்... ஆனாலும் கிடைக்காத வெற்றி..வேதனையில் ஜெய் ரசிகர்கள்
2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஜெய்.
நடிகர் ஜெய் இந்தாண்டு அதிக படங்களில் நடித்த நிலையில் அவர் எதிர்பார்க்கும் வெற்றி இன்னும் கிடைக்கவில்லை என ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த பகவதி படத்தில் அவரது தம்பி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதன்பின் 5 ஆண்டுகள் கழித்து அவர் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த சென்னை - 600028 நல்ல அடையாளத்தைக் கொடுத்த நிலையில், 2008ல் வெளியான சுப்பிரமணியபுரம் திரைப்படம் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த அப்படம் கல்ட் கிளாசிக் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, அர்ஜூனன் காதலி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்காஹ், வலியவன், புகழ், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், சென்னை 28(2), எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன், கலகலப்பு -2, ஜருகண்டி, பார்ட்டி, நீயா 2, கேப்மாரி, வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே, பட்டாம் பூச்சி,எண்ணித் துணிக என இந்த 15 வருடத்தில் 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து விட்டார்.
ஆனால் அவர் 2,3 ஹீரோக்களுடன் இணைந்து நடிக்கும் படங்கள் பெறும் வெற்றி, தனி ஹீரோவாக நடிக்கும் போது கிடைப்பதில்லை. அவரின் நடிப்பில் எவ்வித குறையும் இல்லாத பட்சத்தில் அவருக்கான சரியான கதைகள் அமையவில்லை என்றே ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர். இந்தாண்டு மட்டும் வீரபாண்டியபுரம், குற்றம் குற்றமே, பட்டாம் பூச்சி,எண்ணித் துணிக ஆகிய 4 படங்கள் ரிலீசான நிலையில் காஃபி வித் காதல், பிரேக்கிங் நியூஸ், உள்ளிட்ட 6 படங்கள் ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ளது. முன்னணி நடிகர்கள் எல்லாம் ஒரு படம், 2 படம் நடித்து வரும் நிலையில் ஜெய் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 6 படங்களில் நடித்துள்ளார்.
இதன்மூலம் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இன்றளவும் ஜெய் உள்ளார். ஆனால் அவருக்கான வெற்றி தான் இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.