Mime gopi : ”நான் ஒரு பொம்மை.. என் நடிப்பிற்கு முன்மாதிரி இவங்கதான் “ - மைம் கோபி சொன்ன சீக்ரெட்ஸ்!
நடிப்பிற்கு, வாழ்க்கை மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவர் மைம் கோபி. மேடை நாடக கலைஞரான இவர் மெட்ராஸ் , கதகளி , கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இது தவிர மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். மைம் கோபி பற்றி திரைத்துறையில் அறியாதவர்கள் இருக்கவே முடியாது. திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு, இவர் சென்னையில் புகழ்பெற்ற மைம் நடிகராக இருந்தார். மேலும் ஜி மைம் ஸ்டுடியோ என்பதையும் நடத்தி வந்தார். மைம் கோபி சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் , எதார்த்தம் உணர்ந்த , மனிதம் போற்றும் மனிதராகத்தான் இருக்கிறார். தனது பிறந்தநாள் உள்ளிட்ட விசேச நாட்களை தொண்டு நிறுவனங்களுக்கு உதவிகள் செய்வது போன்றவற்றை செய்து வரும் மீம் கோபி , மக்களை படிக்க வேண்டும் , அது நடிப்பிற்கு வாழ்க்கை மிகப்பெரும் உதவியாக இருக்கும் என்றார்.
View this post on Instagram
“நான் எனது காரை ஓட்டி வரும் தம்பியை , டிரைவர் என சொல்லமாட்டேன். அவர் எனக்கு தம்பி. அதே போல ஆட்டோ ஓட்டுநரை ஆட்டோ அண்ணா என சொல்லக்கூடாது. அண்ணா என கூறினால் போதுமானது. என் மகனுக்கு நான் அதைத்தான் சொல்லிக்கொடுக்கிறேன். நானும் என் மகனும் தினமும் இளநீர் குடிக்க செல்வோம். அந்த அண்ணா என்னையும் என் மகனையும் கண்டவுடன் எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் சொல்லுவார். நானும் என் மகனும் அதே போல வணக்கம் சொல்லுவோம். என் மகன் என்னிடம் கேட்டான் , ஏன் அப்பா அவர் நம்மை பார்த்தவுடன் எழுந்து நிற்கிறார், அப்படின்னு ...அப்போ நான் சொன்னேன்..அது அவர் நமக்கு தரும் மரியாதை, அதை நாம திருப்பி செய்யனும் அப்படின்னு..தொழில்களை வைத்து மனிதர்களை கூப்பிடும் பொழுதுதான் ஏற்றத்தாழ்வுகள் பிறக்கிறது. ”
View this post on Instagram
“பிணம் எரிப்பவரை வெட்டியான் என சொல்லாமல், அண்ணன் என சொல்லி பழகுங்கள். நான் இல்லை என்றால் எனது மகனை பார்த்துக்கொள்ள நாளை 100 பேர் இருக்காங்க. அவனை என்னைவிட நல்லா பார்த்துப்பாங்க. நான் செய்வது நடிப்பு தொழில் , அதே போல ஒரு ஒருவருக்கும் ஒரு தொழில். நான் சினிமாவில் நடிக்கும்பொழுது , மனிதர்களிடம் பழகியதைத்தான் உள்வாங்கி நடிப்பேன். உண்மையில் நான் குடிக்க மாட்டேன். ஆனால் 24 மணி நேரமும் குடிகாரனை போல நடிக்கவேண்டிய சூழலில் நான் , எங்கே எவருடனோ ஏற்பட்ட பழக்கம் என உதவியாக இருக்கிறது. நான் ஒரு பொம்மை...களிமண் ..என்னை எப்படியாக இயக்குநர் நடிக்க சொல்கிறாரோ அப்படியாக என்னால் மாற முடியும் “ என்றார் மைம் கோபி.