![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Maaveeran Update: பக்ரீத் வெளியீடாக வருகிறதா சிவகார்த்திகேயனின் மாவீரன்?
ப்ரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு சிறு சறுக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது மாவீரன் படத்தின் மீது பெரும் கவனம் செலுத்தி சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
![Maaveeran Update: பக்ரீத் வெளியீடாக வருகிறதா சிவகார்த்திகேயனின் மாவீரன்? Maveeran update Sivakarthikeyan Aditi shankar starrer to be released on Bakrid 2023 sources Maaveeran Update: பக்ரீத் வெளியீடாக வருகிறதா சிவகார்த்திகேயனின் மாவீரன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/18/fbe4b09a83fc264bc5aeefc29858dbc51676736153610574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாவீரன் படம் பக்ரீத் வெளியீடாக ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
மண்டேலா திரைப்படத்துக்காக தேசிய விருது வென்ற மடோன் அஸ்வின் உடன் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள படம் ’மாவீரன்’.
ப்ரின்ஸ் படத் தோல்விக்குப் பிறகு சிறு சறுக்கல் ஏற்பட்ட நிலையில், தற்போது மாவீரன் படத்தின் மீது பெரும் கவனம் செலுத்தி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
அதிதி சங்கர் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு, டோலிவுட் நடிகர் சுனில் எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மண்டேலா திரைப்படத்துக்கு இசையமைத்து கவனமீர்த்த இசையமைப்பாளர் பரத் சங்கரே, மாவீரன் படத்துக்கும் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் ஜூன் மாதம் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை தினத்தன்று இப்படம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகாத நிலையில், இணையத்தில் இந்தத் தகவல் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று (பிப்.17) சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் சீனா சீனா எனும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.
Here is the first single from #Maaveeran #SceneAhSceneAh - https://t.co/8nmbtPGvJ7
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2023
Sung by our dearest Rockstar @anirudhofficial 😎
A @bharathsankar12 Musical!🥁
🕺by @shobimaster
✍🏼 #Kabilan & @CMLOKESH @madonneashwin @AditiShankarofl @vidhu_ayyanna @philoedit @iamarunviswa
நடன இயக்குநர் ஷோபியின் துள்ளலான நடன அசைவுகளுடன் பாடலாசிரியர்கள் கபிலன், சி.எம்.லோகேஷ் ஆகியோரின் பாடல் வரிகளுடன் இந்தப் பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதேபோல் முன்னதாக சிவகார்த்திகேயன் சினிமாவில் 11 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடி வீடியோ பகிர்ந்தது வரவேற்பைப் பெற்றது.
மேலும் ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பான எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் அதி நவீன மோகோபாட் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற கேமராவை முன்னதாக லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்துக்காக பயன்படுத்தினார்.
மேலும், புலி முருகன், யசோதா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென் இந்தப் படத்துக்காக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈசிஆரை சுற்றியுள்ள பகுதிகளில் மாவீரன் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு மே மாதம் இப்படம் வெளியாகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: Pradeep Ranganathan : "இன்னைக்கு பாராட்டுறாங்க... ஆனா..” லவ் டுடே இயக்குநரை விமர்சித்து வாரிய கார்த்திக் குமார்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)