Manobala on Thalapathy 67: ‘தளபதி 67’ பற்றி ட்வீட் செய்து மன்னிப்புக்கேட்ட மனோபாலா; சோசியல் மீடியாவில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
‘தளபதி 67’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது; லோகேஷையும் தளபதியையும் சந்தித்தேன், அதே ஆற்றல், முதல் நாளே..தூள் என்று மனோபாலா பதிவிட்டார்;
விஜய் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது; இத்திரைப்படத்தில் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா, குஷ்பு,பிரகாஷ் ராஜ்,சரத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்;
இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர இருக்கிறது. இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்; இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வரை வெளிவரவில்லை.இப்போதே இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகளவில் இருந்து வருகிறது; இத்திரைப்படத்தில் திரிஷா,மன்சூர் அலிகான்,சஞ்சய் தத் ஆகியோர் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது; இத்திரைப்படத்தின் பூஜை டிசம்பர் மாத தொடக்கத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோஸில் நடைபெற்றது; நேற்று சென்னை பிரசாத் லேப்பில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நடிகர் மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் 'தளபதி 67' படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக ட்வீட் செய்தார். இது தொடர்பாக அவர்,"தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியது.லோகேஷையும் தளபதியையும் சந்தித்தேன், அதே ஆற்றல்,முதல் நாளே..தூள்" என குறிப்பிட்டு இருந்தார்;
I deleted my tweet...forgive me..
— Manobala (@manobalam) January 2, 2023
அதன் பிறகு இன்று அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு "நான் ட்வீட்டை டெலிட் செய்துவிட்டேன்,என்னை மன்னித்துவிடுங்கள்" என ட்வீட் செய்தார்; இதற்கு நெட்டிசன்கள் பலரும் அவரது ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து வைத்து அவரை கலாய்த்து வருகின்றனர்.