Sathyaraj: கட்டப்பா ரகசியத்தை இப்படித்தான் காப்பாற்றினேன்... நக்கலாக நச்சுனு பதிலளித்த சத்யராஜ்!
மொட்டை கெட்டப், கெத்து நடை படத்தின் அதிகம் கவனிக்க வைத்த சத்யராஜ் கட்டப்பா கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.
கட்டப்பா
பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார்? என்ற இந்த கேள்வி இந்திய சினிமாவை சில ஆண்டுகளால பரபரப்பாக வைத்திருந்தது. 2015ம் ஆண்டு ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. ஒரே பார்ட்டாக முடியாமல் இரண்டாம் பாகமாகவும் அந்தப்படம் தொடர்ந்தது. குறிப்பாக முதல் பாகத்தின் முடிவில் பாகுபலியை கத்தியால் கட்டப்பா குத்துவது போன்று பரபரப்பான காட்சியுடன் தொடரும் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்தார் ராஜமெளலி.
எப்போதுதான் இரண்டாம் பாகம் வருமோ என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக்கிடந்தனர். ஒரு வழியாக இரண்டாம் பாகமும் வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போட்டது. பாகுபலி படத்தின் பல கதாபாத்திரங்கள் பட்டையைக் கிளப்பி இருந்தாலும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ்க்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மொட்டை கெட்டப், கெத்து நடை படத்தின் அதிகம் கவனிக்க வைத்த சத்யராஜ் கட்டப்பா கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.
ஏன் பாகுபலியைக் கொன்றார் ?
என்னைப் பொறுத்தவரை பாகுபலிக்கு முன், பாகுபலிக்கு பின் என என் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம். பாகுபலி படத்துக்கு முன்புவரை என்னை தென்னிந்தியாவுக்கு மட்டுமே தெரியும். உலக நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். கட்டப்பா கதாபாத்திரத்துக்கு பிறகு என்னை அனைவருக்குமே தெரிய வந்தது என்றார். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்காக பதிலை எப்படி கட்டிக்காத்தீர்கள்? என்ற கேள்விக்கு நக்கலாக பதிலளித்த சத்யராஜ், தயாரிப்பாளர் எனக்கு நிறைய பணம் கொடுத்தார். அதேபோல உண்மையைச் சொல்லக் கூடாது என்று ராஜமெளலி என்னிடம் கூறிவிட்டார். அதனால்தான் நான் எதுவுமே சொல்லவில்லை என்றார்.
படங்கள்..
44 வருடங்களாக சினிமாவில் நடித்துவரும் சத்யராஜ் ,இதுவரை 250க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் நடித்த அதிக படங்கள் தமிழ்தான். இதுகுறித்து பேசிய சத்யராஜ், என்னுடைய படங்களில் அதிகமான படங்கள் தமிழில்தான் நடித்துள்ளார். 3 படங்கள் மட்டுமே தெலுங்கில் நடித்துள்ளேன். மலையாளத்தில் இரண்டு படங்கள். சென்னை எக்ஸ்பிரஸ் படமான ஒரே ஒரு இந்தி படத்தில்தான் நடித்துள்ளேன் என்றார்.
ஏன் இந்தி படங்கள் அதிகம் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பளீரென பதிலளித்த சத்யராஜ், '' எனக்கு இந்திப்படத்தில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் நேரம் அமையவில்லை. டைகர் ஷெரஃப் படத்தில் நடிக்க 40 நாட்கள் கால்ஷீட் கேட்டார்கள். ஆனால் படப்பிடிப்பு லண்டனில் என்பதால் என்னால் செல்லமுடியவில்லை. அதேபோல வித்யாபாலன் படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்தது, அந்த நேரத்தில்தான் வீட்ல விசேசம் பட ஷூட்டிங் போய்க்கொண்டு இருந்தது. மற்றொரு பிரச்னை என்னவென்றால் எனக்கு தமிழ் மட்டுமே நன்றாக தெரியும். இங்கிலீஸ் சமாளிப்பேன். மற்ற மொழிகள் என்றால் ப்ராம்டர் பயன்படுத்த வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்