Lakshmy Ramakrishnan: சொந்த கதையை படமாக எடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்? ‘ஆர் யூ ஓகே பேபி?’ படத்தின் அப்டேட் இதோ..!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் யூ ஓகே பேபி? படத்தை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர் யூ ஓகே பேபி? படத்தை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகையாக பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். அதன்பிறகு ஏராளமான தமிழ் படங்களில் அம்மா வேடங்களில் நடித்த அவருக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை கொடுத்தது.
இதற்கிடையில் ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் என 4 படங்களையும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
அவரின் 5வது படமாக ‘ஆர் யூ ஓகே பேபி?’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, மிஷ்கின், ரோபோ ஷங்கர், வினோதினி,பாவல் நவநீதன் உள்ளிட்டவர்களுன் லட்சுமி ராமகிருஷ்ணனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தைக் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி என்னுடைய கேரியரில் மிகச் சிறந்த மற்றூம் மோசமான ஒரு நிகழ்வாக அமைந்தது. அந்த நிகழ்ச்சி மூலம் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நான் அறிந்திருக்க விரும்பினேன். அத்தகைய குருட்டு நம்பிக்கை நிகழ்ச்சியை நடத்த தேவைப்பட்டது. எனது ! நோக்கங்கள் எப்போதும் சரியாகவே இருந்தது. மிக முக்கியமான நிலைகளில் நான் உறுதியாகவே இருந்தேன். அதில் ஒரு முக்கியமான கண்ணோட்டத்தை எனது ‘ஆர் யூ ஓகே பேபி?’ படம் வழங்கும்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு பேட்டியில், ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன் என்றும், அதில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ஒரு விஷயத்தை இந்த படத்தின் மூலம் சொல்லப்போகிறேன்’ எனவும் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருந்தார். மேலும் ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களை பற்றிய இந்த கதை சொல்லப்பட வேண்டிய கதை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இடம் பெறும் நிலையில், அதனை இளையராஜாவே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.