Kushbu Hair Style :அது உண்மை இல்லீங்க.. நம்பிட்டீங்களா? மீண்டும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த குஷ்பு...
குஷ்புவின் டாம் பாய் ஹேர் கட் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது அது குறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை குஷ்பு 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். அப்போது நடிகை குஷ்புவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டியது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்த குஷ்பு தற்போது பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது குஷ்பு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ளார்.
சமீபத்தில் குஷ்பு ஷார்ட் டாம் பாய் ஹேர் கட்டில் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இந்த ஹேர் கட் உங்களுக்கு அழகாக இருப்பதாக கமெண்ட் செய்திருந்தனர். ஆனால் ஒரு சில ரசிகர்களோ இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முடியை ஏன் வெட்டினீங்க என ஏராளமானோர் கமெண்ட் செய்த நிலையில் தற்போது குஷ்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அந்த பதிவில், நான் முடியை வெட்டவில்லை, அது ஒரு படத்திற்கான டெஸ்ட் ஷூட் அவ்வளவுதான் என விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் நீளமான முடி இருக்கும் போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
நடிகை குஷ்பு எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்கள் மற்றும் தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் இவர் உடல் எடை குறைந்த போட்டோவை பகிர்ந்து இருந்தார். அந்த போட்டோ மிகவும் வைரலானது. இந்நிலையில் இவர் இரண்டு தினங்களுக்கு முன் பகிர்ந்த டாம் பாய் ஹேர் கட் போட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது , அது ஒரு டெஸ்ட்ஷூட்டிற்காக எடுக்கப்பட்ட போட்டோ அவ்வளவு தான் என விளக்கம் அளித்துள்ளார். நீளமான கூந்தலாக இருந்தாலும் சரி குட்டையான கூந்தலாக இருந்தாலும் சரி, எப்போதும் நீங்க க்யூட் தான் மேடம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க
Madurai Train Fire: மதுரையை உலுக்கிய கோர ரயில் விபத்து.. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது..!
Rain Alert: அடுத்த 3 மணி நேரம்.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு