(Source: Poll of Polls)
Rain Alert: அடுத்த 3 மணி நேரம்.. 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வாய்ப்பு:
இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது, “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 28.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
30.08.2023 மற்றும் 31.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
01.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.09.2023 மற்றும் 03.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி) 9, கேசிஎஸ் மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), கேசிஎஸ் மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி) தலா 8, செஞ்சி (விழுப்புரம்) 7, திண்டிவனம் (விழுப்புரம்), டிஎஸ்எல் கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 5, ஆர்எஸ்எல்-3 செம்மேடு (விழுப்புரம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), ஆர்எஸ்எல் வல்லம் (விழுப்புரம்), ஆர்எஸ்எல்-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), மணம்பூண்டி (விழுப்புரம்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 4, டிஎஸ்எல் தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), ஆற்காடு (ராணிப்பேட்டை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), தர்மபுரி தலா 3, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பாலக்கோடு (தர்மபுரி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), டிஎஸ்எல் விருகாவூர் (கள்ளக்குறிச்சி), கடலூர், திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), டிஎஸ்எல் ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), முகையூர் (விழுப்புரம்), சேத்தியாதோப்பு (கடலூர்), மரக்காணம் (விழுப்புரம்), தர்மபுரி PTO (தர்மபுரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 2, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), டிஎஸ்எல் எறையூர் (கள்ளக்குறிச்சி), சிதம்பரம் (கடலூர்), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), குப்பநத்தம் (கடலூர்), கிருஷ்ணகிரி அணை, திருவள்ளூர், வடகுத்து (கடலூர்), விருத்தாசலம் Kvk Aws (கடலூர்)பண்ருட்டி (கடலூர்), பாப்பாரப்பட்டி Kvk Aws (தர்மபுரி), கடலூர் ஆட்சியர் அலுவலகம், செங்கம் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பென்னாகரம் (தர்மபுரி), ராணிப்பேட்டை, எஸ்ஆர்சி குடிதாங்கி (கடலூர்), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), கள்ளக்குறிச்சி தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
29.08.2023 மற்றும் 30.08.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.