Kick Teaser : சந்தானம் அடுத்தடுத்து ஹிட் கொடுக்கப்போறாரா? வெளியான முக்கிய அப்டேட்..
சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அதே ஜானரில் புதிய படத்தில் நடித்துள்ளார். 'கிக்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் முழு நீள காமெடி திரைப்படமாக உருவாகி வருகிறது. ஃபார்ட்யூன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னடத்தில் வெளியான 'லல் குரு', 'கானா பஜானா', 'விசில்', 'ஆரஞ்ச்' உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த பிரசாந்த் ராஜ் இப்படத்தை இயக்கிவுள்ளார். சந்தானத்திற்கு ஜோடியாக 'தாராள பிரபு' படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, YG மகேந்திரன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி திரையரங்கில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சந்தானம். காமெடியனாக ஜொலித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாகவும் மாஸ் காட்டி வருகிறார். கடைசியாக சந்தானத்தின் நடிப்பில் வெளியான குலு குலு என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தை எஸ்கே ஆனந்த் இயக்கத்தில், ஆர் கே என்டெர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவானது. டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக சுரபி நடித்த நிலையில், இவர்களுடன் இணைந்து ரெடின் கிங்ஸிலி, லொள்ளு சபா மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடைசியாக சந்தானத்தின் நடிப்பில் வெளியான ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுக்காத நிலையில் டிடி ரீட்டன்ஸ் நல்ல காமெடி படமாக இருந்ததுடன் ரசிகர்களையும் கொண்டாட வைத்தது.
மேலும் படிக்க,