மேலும் அறிய

TNTET Free Coaching: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச நேரடிப் பயிற்சி வகுப்புகள்- எங்கு, எப்போது? விவரம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடிப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்க உள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நேரடிப் பயிற்சி வகுப்புகள் இலவசமாக சென்னையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்க உள்ளன. தேர்வர்கள் https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துச் சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்‌நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌நெறி வழிகாட்டும்‌ மையங்களில்‌ உள்ள தன்னார்வ பயிலும்‌ வட்டங்கள்‌ மூலம்‌ போட்டித்‌ தேர்வுகளுக்கு தயாராகும்‌ தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தால்‌ (டிஆர்பி) நடத்தப்படும்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர்‌ மாதம்‌ வளியாக உள்ளது. மேலும்‌ இத்தேர்வு தொடர்பான விவரங்கள்‌ அறிந்துகொள்ள https://www.trb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்‌.

தகுதித்‌ தேர்வு காலிப் பணியிடத்திற்கான கல்வி, வயதுத் தகுதிகள் என்னென்ன?

1. கல்வித் தகுதி 

முதல் தாள் - 12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டு தொடக்கக் கல்வி டிப்ளமோ தேர்ச்சி அல்லது கடைசி ஆண்டு டிப்ளமோ (+2 and passed or appearing in final year of 2 Years Diploma in Elementary Education)

இரண்டாம் தாள் - பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் பி.எட். தேர்ச்சி அல்லது கடைசி ஆண்டு பி.எட். படிப்பு

2. வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. 

இதனைத்‌ தொடர்ந்து சென்னை, கிண்டியில்‌ செயல்பட்டு வரும்‌ தொழில்சார்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விற்கான கட்டணமில்லா நேரடி (ஆஃப்லைன்) பயிற்சி வகுப்புகள்‌ 21.08.2023 அன்று தொடங்கப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில்‌ வாரந்தோறும்‌ மாதிரி தேர்வுகளும்‌ நடத்தப்படவுள்ளன. இவ்வலுவலகத்தால்‌ நடத்தப்படவுள்ள TET முதல் தாள் மற்றும்‌இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொள்ள Google Form link https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8   என்ற இணைப்பை க்ளிக் செய்து தங்களின்‌ விவரங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள்‌ அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்‌ - 9499966021 & 044-22501032. 

மின்னஞ்சல் முகவரி -peeochn@gmail.com

இவ்வாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, அதற்கான அறிவிப்பு, பாடத் திட்டம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சமீபத்திய அறிவிப்புகள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

இதையும் வாசிக்கலாம்: UPSC SCHOLARSHIP EXAM 2023: யுபிஎஸ்சி தேர்வரா நீங்க? மாதம் ரூ.7,500 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை, பாடத்திட்டம் இதோ! 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Embed widget