Mammootty: மலையாளிகளின் பெருமை மம்மூட்டி: விமர்சனங்களுக்கு எதிராக பொங்கிய கேரள அரசியல் கட்சிகள்!
நடிகர் மம்மூட்டியை குறிப்பிட்ட தரப்பினர் இணையதளத்தில் தாக்கி வரும் நிலையில் கேரள அரசியல் கட்சியினர் மம்மூட்டிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்
மம்மூட்டி
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப் படும் நடிகர் மம்மூட்டி. ரசிகர்களால் செல்லமாக மம்மூக்கா என்று அழைக்கப் படும் மம்மூட்டி நடித்துள்ள டர்போ படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இப்படியான நிலையில் மம்மூட்டி மீது சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
நடிகர் மம்மூட்டி மீது தாக்குதல்
Muhammad Kutty, the most deceptive jihadist in the Malayalam film industry. pic.twitter.com/oIdYiwNOrG
— ഹരിശങ്കർ (@Hari__Sankar) May 14, 2024
கடந்த 2022 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் புழு. பார்வதி திருவோத்து இப்படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்திருந்தார். ரதீனா பி.டி இப்படத்தை இயக்கினார். விமர்சன ரீதியாக வரவேற்பைப் பற்ற இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இப்படத்தின் இயக்குநர் ரதீனாவின் கணவர் கணவர் சமீபத்தில் யூடியூப் சானல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இப்படத்தை கடுமையாக விமர்சித்து பேசியதே இந்த சர்ச்சைக்கு காரணம். புழு படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை விமர்சிக்கும் வகையில் எடுக்கப் பட்டிருக்கிறது. இப்படியான ஒரு படத்தில் மம்மூட்டி நடித்திருக்கவே கூடாது என்று அவர் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து புழு படத்திற்கு மம்மூட்டிக்கும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழத் தொடங்கின.
மம்மூட்டியை இப்படத்தில் நடித்ததற்காக விமர்சித்து வரும் இத்தரப்பினர் மம்மூட்டியின் இயற்பெயரான முகமது குட்டி என்று அவரை அழைத்து அவரது மதத்தை அடையாளப் படுத்தி வருகிறார்கள்.
மம்மூட்டி ஆதரவாக கேரள அரசியல் கட்சியினர்
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து ஆதரவாக கேரள கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் கேரள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் நடிகர் மம்மூட்டிக்கு ஆதரவுத் தெரிவித்து வருகிறார்கள். பொதுக் கல்வித் துறை அமைச்சரான வி சிவன்குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மம்மூட்டி ஆதரவாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் “ மம்மூட்டி மலையாளிகளின் பெருமை" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே ராஜன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மம்மூட்டி கேரளா மற்றும் மலையாளிகளின் பெருமை. இந்த மாதிரியான செயல்களுக்குப் பின் சங் பரிவார் கட்சியின் பங்கு இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால் அவர்களின் அரசியல் இங்கு பழிக்காது இது கேரளா என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் மம்மூட்டியை முகமது குட்டி என்றும் , விஜயை ஜோசப் விஜய் என்று அழைப்பது எல்லாம் கேரளாவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.