” ரஜினியை மறந்துடுவாங்க! ஆனால் கமலை!” - 'கவிதாலயா' கிருஷ்ணன் ஓபன் அப்!
"ஆனால் ரஜினி இப்போது வரைக்கும் ஒரு டெப்ளேட்டில்தான் இருக்கிறார். அதுதான் அவரது ரசிகர்களுக்கு பிடிக்கிறது என அதையே திரும்ப திரும்ப செய்துவிட்டார்"
தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் கிருஷ்ணன். பலருக்கும் கவிதாலயா கிருஷ்ணன் என்றால்தான் பரீட்சியம் . இவர் கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்ததால் இவருடைய பெயருடன் கவிதாலயா என்பதும் அடைமொழியாக ஒட்டிக்கொண்டது. தமிழக அரசின் கலைமாமனி விருது பெற்றவர்
View this post on Instagram
ரஜினி , கமலுக்கு நெருக்கமானவர்:
நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ள நடிகர் கவிதாலயா கிருஷ்ணன், கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பர். ஆரம்ப நாட்களில் அவருடன் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தர்மத்தின் தலைவன் , சத்யா, பாட்ஷா,அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் 90 களின் சூப்பர் ஸ்டார்ஸான கமல், ரஜினியுடன் நடித்திருக்கிறார். அவர்களுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்த கிருஷ்ணன். ரஜினிகாந்த் சிவாஜி ராவாக சினிமாத்துறைக்கு வந்த பொழுதே அவரை எனக்கு தெரியும் என்றார்.
View this post on Instagram
கமல் , ரஜினி பற்றி :
ரஜினிகாந்துடன் நெருங்கி பழகிய வாய்ப்பு கிடைத்தது என கூறும் கிருஷ்ணன் அவர் எளிமையானவர் , இறங்கி பழகுவார் என்கிறார். கமல்ஹாசன் மகாநதிக்கு பிறகு தன்னுடைய ஸ்டைலையே மாற்றிவிட்டார். ஆனால் ரஜினி இப்போது வரைக்கும் ஒரு டெப்ளேட்டில்தான் இருக்கிறார். அதுதான் அவரது ரசிகர்களுக்கு பிடிக்கிறது என அதையே திரும்ப திரும்ப செய்துவிட்டார். அவரால் அந்த டெம்ப்ளேட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. அமிதாப் பச்சனுக்கும் அப்படியான ஒரு டெம்ப்ளேட் இருந்தது. ஆனால் அதை உடைத்து அவர் சாமர்த்தியமாக வெளியே வந்துவிட்டார். ரஜினி வந்திருந்தால் இரண்டாவது பாதியில் மாஸான பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கலாம். மாஸ் காட் ஃபாதாராக கூட களமிறங்கியிருக்கலாம். எதிர்கால தலைமுறையினர் ரஜினிகாந்தை மறந்துவிடுவார்கள். ஆனால் கமல்ஹாசனை மறக்க மாட்டார்கள் . ஏன்னா அவரது மைக்கல் மதன காமராஜர், அவ்வை சண்முகி ,அபூர்வ சகோதர்கள் என அனைத்து படங்களும் அடுத்த 50 வருடங்களுக்கு பேசும் என்றார்.