எல்லை மீறிய கவர்ச்சி.. வரம்பு மீறினால் பேயாக மாறிடுவேன்.. எச்சரிக்கை விடுத்த ரேஷ்மா பசுபுலேட்டி!
கார்த்திகை தீபம் சீரியலில் கெத்தான மாமியாராக வரும் ரேஷ்மா பசுபுலேட்டியின் கவர்ச்சி புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர்
ரேஷ்மா பசுபுலேட்டி. இப்படத்தில் அந்த கதாப்பாத்திரன் பெயரை வைத்தே காமெடி உருவானது மக்களிடையே பெரிய ரீச் கிடைத்தது. இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்யலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து பிரபலம் அடைந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியாக கெத்தான மாமியாராக நடித்து வருகிறார்.
கார்த்திகை தீபத்தில் கெத்தான மாமியார்
சீரியலில், புடவை, தலை நிறைய பூ வைத்துக்கொண்டு வலம் வரும் இவர், நிஜத்தில் இணையமே திகைத்துப்போகும் அளவிற்கு மாடர்ன் உடையில் உள்ளார். கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடிக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் நான்கு பெண்களுக்கு அம்மாவாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி, ஒரு குடும்பத்தை கட்டி காக்கும் சாமூண்டீஸ்வரியாக நடிக்கிறார். சமீபத்தில் கார்த்திகை தீபம் சீரியலில் தேர்தல் பிரச்சாரம் போன்ற காட்சி இடம்பெற்றது. அதில் சாமூண்டிஸ்வரியின் இடுப்பை கிள்ளும் நபரால் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. ஒரு பக்கம் வில்லி முகம் கொண்டிருந்தாலும், கார்த்திக்கை விட்டுகொடுக்காத பாசமான மாமியாராக வலம் வருகிறார். இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களிலும் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ரேஷ்மா பசுபுலேட்டி கவர்ச்சி புகைப்படம்
சீரியல்களில் குடும்ப பாங்காக வரும் ரேஷ்மா சமூகவலைதளங்களில் எப்போதும் கவர்ச்சி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிடுவார். அண்மையில் தனது உதட்டை பெரிதாக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதும் சர்ச்சையானது. நீங்க என்ன சொன்னாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை என்றே பதில் அளித்தார். சினிமா குடும்பத்தை பின்னணியாக கொண்டிருந்தாலும் மிகவும் கஷ்டப்பட்டே இந்த நிலைக்கு வந்திருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இளசுகளை மோகம் கொள்ள வைத்திருக்கிறது.
எச்சரிக்கை விடுத்த நடிகை
தாராள மனசு போன்று கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டதோடு மட்டும் இல்லாமல், தன்னை யாராவது விமர்சித்தால் அதற்கும் தக்க பதிலடி கொடுப்பது போன்ற போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். "யாராவது வரம்பு மீறினால் அல்லது எல்லைகளை தாண்டினால் நான் பேயாக மாறுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கவர்ச்சியான புகைப்படம் இணையத்தை கிறங்கடித்து வருகிறது.
View this post on Instagram





















