மேலும் அறிய

அரசன் படத்திற்கு இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை..விஜய் சேதுபதி கொடுத்த ஷாக்

வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்திற்கு தான் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவில்லை என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கலைப்புலி தானு இயக்கத்தில் வெற்றிமாறன் இயக்கி சிம்பு நாயகனாக நடிக்கும் படம் அரசன். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகியதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வந்த நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் விஜய் சேதுபதி.  

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் அரசனைச் சுற்றி பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருகின்றன. சிம்பு கமிட் ஆன படங்கள் அடுத்தடுத்து கைவிடப்படுவதே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். மாநாடு படத்திற்கு பின் மீண்டும் கமர்சியல் ரூட்டில் பயணித்து வந்தார் சிம்பு. அவரது ரசிகர்களுக்கு அவருக்கு பெரியளவில் ஆதரவாக இருந்து வந்தனர். கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு வரலாற்று திரைப்படத்தில் நடிக்க இருந்தார். தக் லைஃப் படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமானதால் இந்த படம் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த படம் கிட்டதட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது

அதே போல் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருந்த படமும் சிவகார்த்திகேயனுக்கு கைமாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சிம்பு முழுக்க முழுக்க வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இதனால் சிம்பு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிம்பு மீண்டும் பழையபடி படப்பிடிப்பிற்கு வருவதில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அரசன் படமும் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அரசன் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து வருவதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரசன் படத்தின் விஜய் சேதுபதி

அரசன் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில் ' வெற்றிமாறன் சார் அரசன் படத்தில் நான் நடிப்பதாக என்னிடம் சொன்னார். நான் கதை என்னவென்று கூட இதுவரை கேட்கவில்லை. படத்திற்கான ஓப்பந்தத்தில் கூட இன்னும் நான் கையெழுத்து போடவில்லை . அவர் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போது நான் செல்வேன்'  என்று கூறியுள்ளார். முன்னதாக விஜய் சேதுபதி அரசன் படத்தில் இருந்து விலகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமையை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமையை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Embed widget