மேலும் அறிய

விஜய்க்கு ஆதரவாக பேசிய ரவி மோகன்..இன்ஸ்டாகிராமில் பொளந்து கட்டிய ஆர்த்தி

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக நடிகர் ரவி மோகனுக்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் .

தவெக தலைவர் விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இப்படியான நிலையில் விஜய் நடிகை த்ரிஷாவுடன் அண்மையில் திருமண நிகழ்வில் கலந்துகொண்டதால் விஜய் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இதற்கு ஆதரவாக நடிகர் ரவி மோகன் அண்மையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது ரவி மோகனின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகர் விஜயின் விவாகரத்து பிரச்சனை சென்றுகொண்டிருக்கும் போதே அவர் த்ரிஷாவுடன் பொது நிகழ்வில் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டார். இதனால் தவெக ஆதரவாளர்களே த்ரிஷா , சங்கீதா என இரு தரப்பாக பிரிந்துள்ளார்கள். விஜயை பலர்  நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷாவுடன் ஒப்பிட்டும் பேசி வந்தார்கள். டிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார். இது தொடர்பாக ஆர்த்தி மற்றும் ரவி மோகன் இருவர் தரப்பிலும் வெவ்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. விவாகரத்து பெறுவதற்கு முன்பே ரவி மோகன் கெனிஷாவுடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தொடங்கினார். கெனிஷாவுடனான உறவு பற்றி ரவி மோகன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் நெருங்கிய உறவில் இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. விவாகரத்து விஷயத்தைப் பொறுத்தவரை விஜய் ரவி மோகனை பின்பற்றி இருப்பதாக பலர் கூறினர். 

ரவி மோகன் விஜய்க்கு ஆதரவு 

விஜய் த்ரிஷா சர்ச்சை பெரிதாக உருவெடுக்க ரவி மோகன் அண்மையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதில் அவர் " பெண்கள்தான் எப்போதும் சரி என்று நினைக்கிறீர்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள்தான் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள். அதைக் கூட நம் நீதித்துறை புரிந்திருக்கிறது. ஒருநாள் என் மனதையும், நான் நேசிக்கும் மக்களுக்காக செய்தவற்றையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். தயவுசெய்து ஒருவரை அமைதியாக வாழ விடுங்கள்; உங்கள் தவறான எண்ணங்களை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். நான் என் பாதைக்குத் திரும்புகிறேன்" என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்

ஆர்த்தி இன்ஸ்டாகிராம் ஸ்டோரி 

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆர்த்தி " இதுவே விவாகரத்து முடிவுக்கு வரும் முன்பு ஆர்த்தி இன்னொரு ஆணுடன்  மேட்சிங்கான உடையில் சென்றிருந்தால் இந்த உலகம் ஏற்றுக்கொண்டிருக்குமா. அப்படி செய்தபின் அவள் பெண்களே பாதிக்கப்படுபவர்கள் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது என்றால் நாங்களும் இந்த மாதிரியான செயல்களை செய்யும் ஆண்களை குற்றம்சாடதான் செய்வோம். இது பெருமைக்குரிய விஷயமில்லை இது ஒரு கொடூரனமான செயல்" என்று ஆர்த்தி கூறியுள்ளார்

தலைப்பு செய்திகள்

Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
‘பியார் பிரேமா கல்யாணம்’ விமர்சனம்: திருமணத்தில் ஆணும் பெண்ணும் ஏன் ஒரே மாதிரி இருக்கக்கூடாது?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?
ரூ.2,000 சம்பளத்தில் தொடங்கிய நயன்தாரா.. முதல் வேலை என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget