Kantara Chapter 1 Trailer : காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
Kantara Chapter 1 Trailer Out: : ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்
காந்தாரா முதல் பாகத்தின் பான் இந்திய வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பொருட்செல்வில் உருவாகியுள்ளது. நாட்டுப்புற தெயவங்களை மையப்படுத்தி முழுக்க முழுக்க பீரியட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பான் இந்திய அளவில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது . காந்தாரா சாப்டர் 1 தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் பிருத்விராஜ் , தெலுங்கில் பிரபாஸ் , இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார்கள்.
A tale of folklore and faith, brought alive with fire & fury. Happy to unveil the Tamil Trailer of #KantaraChapter1 - a rooted spectacle for all cinema lovers.https://t.co/Xw7oWd6HPz
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 22, 2025
Best wishes to @shetty_rishab, @rukminitweets and @hombalefilms for a massive success 😊👍… pic.twitter.com/XiHaJrtV4k
காந்தாரா டிரெய்லர் எப்படி இருக்கு ?
ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் உலகளவில் இந்திய வரலாற்று படங்களின் மீது கவனத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் , கன்னடத்தில் கே.ஜி.எஃப் , தெலுங்கில் புஷ்பா மற்றும் கல்கி போன்ற தென் இந்திய படங்கள் உலகம் முழுவதிலும் பெரியளவில் கவனமீர்த்த படங்களாகவும் அதிக வசூல் ஈட்டிய படங்களாகவும் இருக்கின்றன.
கே.ஜி.எஃப் படத்திற்கு பின் கன்னட படங்களுக்கான கமர்சியல் மார்கெட் பெரிதானது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா முதல் பாகம் பான் இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கர்நாடகாக மாநிலத்தின் மலைக்கிராமத்தின் நாட்டார் கதைகளை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியது. ரூ 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ 450 கோடி வசை வசூலித்தது. தற்போது சுமார் ரூ 120 கோடி பட்ஜெட்டில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது
3 நிமிட நீளமுள்ள டிரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. மன்னராட்சி , அரசனுக்கு எதிராக உருவாகும் ஒரு கடவுள் அவதாரம் என முழுக்க முழுக்க வரலாற்று திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை இந்த டிரெய்லரில் பார்க்கலாம். ஜெயராம் , குல்ஷன் தேவையா உள்ளிட்ட பல்வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ருக்மினி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். ரொமான்ஸ், ஆகஷன் , நகைச்சுவை , வரலாறு என ஆர்.ஆர்.ஆர். பாகுபலி , பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களைக் காட்டிலும் நேர்த்தியாக இப்படம் உருவாகியிருக்கும் என இந்த டிரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.





















