திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, இந்த அறிவிப்பை தேர்தல் ஸ்டண்ட் என விமர்சித்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவனோ, ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
TN Election 2026: பில்லு குறையில, கடன் கரையில, லைவ் தெரியில - சூரியனால் இலைக்கு ஜாக்பாட்? நட்டாத்தில் நாயகன்
TN Election 2026 DMK Manifesto: கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அள்ளி வீச நிறைவேற்றாமல் உள்ள பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை, பரப்புரையில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.

TN Election 2026 DMK Manifesto: திமுக தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதாக அதிமுக கடுமையாக சாட தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: வாக்குறுதி கலாட்டா
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாங்கள் வெற்றி பெற்றால் அதை செய்வோம், இதை செய்வோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீச தொடங்கிவிட்டன. அந்த வகையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், கருணை அடிப்படையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு திமுக கூட்டணியில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எடப்பாடியின் அறிவிப்பு தேர்தல் ஸ்டண்ட் என சாடினார். விசிக தலைவர் திருமாவளவனோ, ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது என விமர்சித்துள்ளார்.
அதிமுக பதிலடி..
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் விமர்சனங்களுக்கு அதிமுக தரப்பினர் இணையத்தில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். திமுகவை போன்று போலியான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் கட்சி அதிமுக கிடையாது எனவும், அவர்கள் கொடுக்கும் ஒரு சில தொகுதிகளுக்காக உண்மையை மறைத்து முட்டுக் கொடுப்பதை கூட்டணி கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பதிலடி தந்துள்ளனர். அதோடு, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுகவால் அறிவிக்கப்பட்ட பல முக்கிய வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாவிட்டாலும், 90 சதவிகிதம் மற்றும் 100 சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என திமுக நாடகமாடுவதை மக்கள் ஏற்கமட்டார்கள் எனவும் அதிமுக - பாஜக கூட்டணியினர் விமர்சித்து வருகின்றனர். அப்படி, இதுவரை நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு ஆளுங்கட்சியை கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்
பில்லு குறையில.. சுடும் மின்சாரம்..
திமுக ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக ஒவ்வொரு மாதம் மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் மின்சாரம் என்ற பலனை பெற முடியும் என, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நம்பினர். ஆனால், இதுநாள் வரை அந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால், 2022, 2023, 2024 மற்றும் 2025 என 4 முறை மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளது என விமர்சிக்கின்றனர்.
கடன் கரையில.. இளைஞர்கள் ஏமாற்றம்
திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதுபோக, நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, மீண்டும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என ஊர் ஊராக உயதநிதி பேசியதையும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இப்படி போலி நம்பிக்கைகளை ஊட்டி வளர்த்து, திமுக மாணவ சமூதாயத்தை ஏமாற்றி விட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
லைவ் தெரியல.. 100 நாள் எப்போ?
திமுக ஆட்சி அமைந்ததுமே சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேசுவதை மட்டுமே நேரலையில் ஒளிபரப்பு செய்வதாகவும், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளை கூட மக்கள் காண வாய்ப்பளிக்கப்படுவதில்லை எனவும் அதிமுக சாடியுள்ளது. மேலும், திமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் சட்டப்பேரவை நடத்தப்பட்டு, மக்கள் பிரச்னைகள் விவாதிக்கப்படும் என்ற வாக்குறுதிகளை எல்லாம் திமுகவே மறந்துவிட்டது எனவும் கிண்டலடித்து வருகின்றனர். இந்த ஆட்சியின் இறுதி அமர்வு 2026, பிப்ரவரி 20 அன்று நிறைவடைந்ததன் அடிப்படிஅயில், 2021 தொடங்கி 2026 வரையில் மொத்தமே 161 நாட்கள் மட்டுமே சட்டமன்றம் கூடியுள்ளது (தி இந்து அறிக்கையின்படி). இது சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக சட்டமன்ற வரலாற்றில் (73 ஆண்டுகளில்) மிகக் குறைவான நாட்கள் சட்டமன்றம் கூடிய ஒரு ஆட்சிக் காலமாகக் கருதப்படுகிறது
லிஸ்ட் போடும் அதிமுக - நீளும் வாக்குறுதிகள்
- பழைய ஓய்வூதிய திட்டம் முழுமையாக மீண்டும் அமல்படுத்தப்படும்
- சமையல் எரிவாயும் சிலிண்டருக்கு ரூ.100 மானியம்
- இடைநிலை ஆசியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும்
- ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, 3.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்பப்படும்
- தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
- ரேஷன் கடைகளில் கூடுதலாக சர்க்கரை மற்றும் மீண்டும் உளுந்து விநியோகம் செய்யப்படும்
- சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும்.
- விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அதற்கான சலுகைகளைப் பெற்றுத்தர திமுக அரசு நடவடிக்கை எடுக்கும்.
- ஜவுளித்துறையை மேம்படுத்துவதற்குத் தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும்
- தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும்.
- சென்னை மெட்ரோ ரயிலில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டணச் சலுகை வழங்கப்படும்.
என அள்ளி வீசிய வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆயிற்று என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வினவி வருகின்றன. தேர்தல் பரப்புரையின் போது அவர்களின் இந்த பொய்களையும் மக்களிடையே அம்பலப்படுத்தி, ஆட்சியில் இருந்து அகற்றுவோமென சவால் விடுத்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமின்றி, மக்களை கூட திமுக ஆட்சி நட்டாத்தில் தவிக்க விட்டுவிட்டது எனவும், இதற்காக அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
திமுக தரப்பு சொல்வது என்ன?
தங்கள் தரப்பில் வழங்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் திமுக 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கிறது. மீதமுள்ளவை பரிசீலனையில் அல்லது மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றி நிறைவேற்றப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. சில திட்டங்கள் நிதி நெருக்கடியாலும் முன்னெடுப்படவில்லையாம் அதேநேரம், பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் போன்ற முன்னோடி திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிக்கு அப்பாற்பட்ட தங்களது செயல்திறனைக் காட்டுவதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறது.
Frequently Asked Questions
அதிமுகவின் 10,000 ரூபாய் உதவித்தொகை அறிவிப்பு குறித்த திமுகவின் நிலைப்பாடு என்ன?
திமுக அரசு, மின்சார கட்டணம் தொடர்பாக என்ன வாக்குறுதி அளித்தது?
திமுக ஆட்சிக்கு வந்தால், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக ஒவ்வொரு மாதம் மின்சார கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் மின்சாரம் என்ற பலனை பெற முடியும் என மக்கள் நம்பினர்.
திமுக அரசு, கல்விக்கடன் ரத்து தொடர்பாக என்ன வாக்குறுதி அளித்தது?
திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்புவது குறித்து அதிமுகவின் குற்றச்சாட்டு என்ன?
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேசுவதை மட்டுமே நேரலையில் ஒளிபரப்புவதாகவும், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளை கூட மக்கள் காண வாய்ப்பளிக்கப்படுவதில்லை எனவும் அதிமுக சாடியுள்ளது.
திமுக தரப்பில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் வாக்குறுதிகளின் எண்ணிக்கை என்ன?
தங்கள் தரப்பில் வழங்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் திமுக 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கிறது. மீதமுள்ளவை பரிசீலனையில் அல்லது மத்திய அரசின் ஒத்துழைப்பு இன்றி நிறைவேற்றப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.






















