நவராத்திரி கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கும் நிலையில் நடிகை ஶ்ரீலீலா பாரம்பரிய உடைகளில் ஜொலிக்கத் தொடங்கியுள்ளார்
சிறந்த நடிப்பு, அசாதாரண நடன அசைவுகள் மற்றும் குறைபாடற்ற ஃபேஷன் உணர்வு ஆகியவற்றால் அறியப்படும் ஸ்ரீலீலா, திரையிலும் சரி திரைக்கு வெளியேயும் சரி அடிக்கடி டிரெண்டுகளை ஏற்படுத்துகிறார்.
மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் , புஷ்பா 2 ஆகிய படங்களில் பாடல்களுக்கு நடனமாடி பான் இந்திய அளவில் கவனமீர்த்தவர் நடிகை ஶ்ரீலீலா
தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்
பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யான் மற்றும் ஶ்ரீலீலா காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழில் சுதா கொங்காரா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்
பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஶ்ரீலீலாவுக்கு பராசக்தி திரைப்படம் தமிழில் ஒரு நல்ல ஓப்பனிங் ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது
சமகாலத்திய நடிகைகளில் தனது ஃபேஷன் சென்ஸிற்காக அதிகம் பேசப்படும் நடிகையாக இருந்து வருகிறார்
நடிப்பு தவிர்த்து மருத்துவ படிப்பையும் தொடர்ந்து வருகிறார்