மேலும் அறிய

Kia Syros EV: ஓடாத இன்ஜின்..! பேட்டரி ஆச்சும் தேறுமா? சைரோஸை மீண்டும் நம்பும் கியா? மின்சார எடிஷன் லாஞ்ச்?

Kia Syros EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் அடுத்த மின்சார கார் மாடலாக, நடப்பாண்டின் இறுதியில் சைரோஸ் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Syros EV: சைரோஸ் மாடலின் இன்ஜின் எடிஷனே விற்பனையில் சொதப்பி வரும் நிலையில், மின்சார மாடல் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கியா மின்சார கார்

முற்றிலும் புதிய இரண்டாவது தலைமுறை செல்டோஸ் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, சைரோஸ் கார் மாடலின் அடிப்படையில் புதிய மின்சார காரையும் நடப்பாண்டில் கியா விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதனை முன்னிட்டு தீவிரமான சாலை பரிசோதனையில் ஈடுபட்டுள்ள அந்த கார் மாடல் தற்போது அடிக்கடி புகைப்படங்களில் சிக்கி வருகிறது. அண்மையில் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்ட கியா சைரோஸ் மாடல், ஆந்திர மாநிலம் அனந்தபூரில் சாலை பரிசோதனையில் சிக்கியது. அங்கு தான் உள்நாட்டில் இந்த ப்ராண்டின் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், வருங்காலத்தில் மின்சார கார்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 

சைரோஸ் மின்சார கார் டிசைன்

சோதனை புகைப்படங்களின்படி, சைரோஸின் முற்றிலுமான மின்சார எடிஷனும், ஸ்ப்லிட் முகப்பு விளக்குகளை கொண்டிருப்பதை உணர முடிகிறது. ஆனால், அதன் முன்புற க்ரில்லின் தோற்றம் சற்றே வித்தியாசமாக உள்ளது. இன்ஜின் எடிஷன் இரண்டு க்ரில் ஓபனிங்குகளை கொண்டிருக்க, மின்சார எடிஷனில் ஒரு ஓபனிங் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓபனிங்கானது தேவைப்படும்போது மட்டுமே திறக்கும் என கூறப்படுகிறது. 17 இன்ச் அலாய் வீல்கள் தனித்துவமான டிசைன் மற்றும் டூயல் டோன் ஃபினிஷிங்கை கொண்டுள்ளன. இன்ஜின் எடிஷனை போன்று இல்லாமல், ஃப்ளஷ் ஃபிட்டட் ரூஃபை பெற்றுள்ளது. 


Kia Syros EV: ஓடாத இன்ஜின்..! பேட்டரி ஆச்சும் தேறுமா? சைரோஸை மீண்டும் நம்பும் கியா? மின்சார எடிஷன் லாஞ்ச்?

சைரோஸ் EV-யில் உட்புறம் எப்படி இருக்கு?

சுற்றுசூழல் மற்றும் மின்சார எடிஷனுக்கு உகந்த வகையில், புதிய சைரோஸ் கார் மாடலானது உட்புறத்தில் புதிய வண்ண விருப்பங்களை பெற உள்ளது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய இரண்டுக்குமே, 12.3 இன் எச்டி டிஸ்பிளே வழங்கப்படுகிறது. மின்சார எடிஷனுக்கு என சில தனித்துவமான அம்சங்களும் சேர்க்கப்படலாம். ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங்கை தீவிரப்படுத்தும் விதமாக, பாடல் ஷிஃப்டர்ஸ் வழங்கப்படலாம்.


Kia Syros EV: ஓடாத இன்ஜின்..! பேட்டரி ஆச்சும் தேறுமா? சைரோஸை மீண்டும் நம்பும் கியா? மின்சார எடிஷன் லாஞ்ச்?

4 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வெண்டிலேடட் முன்புற இருக்கை, ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடிங் மற்றும் ரிக்ளைனிங் ஆப்ஷ்னகளுடன் கூடிய வெண்டிலேடட் ரியர் சீட், 64 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங் சிஸ்டம் மற்றும் 8 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டோன் சவுண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இடம்பெறலாம். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, 360 டிகிரி கேமரா சிஸ்டம், லெவல் 2 ADAS,  டூயல் கேமரா உடன் கூடிய டேஷ்கேம் மற்றும் 6 ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

சைரோஸ் EV - பேட்டரி, ரேஞ்ச், விலை விவரங்கள்

சைரோஸின் மின்சார எடிஷனானது இரண்டு ஒற்றை மோட்டார் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். ஒன்றில் சிறிய பேட்டரி பேக்கும், மற்றொன்றில் பெரிய பேட்டரி பேக்கும் இடம்பெறலாம். இதில் உள்ள லாங்க் ரேஞ்ச் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சம் 475 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூரில் 14 முதல் 20 லட்சம் வரையில் இந்த காரின் விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. டாடா நெக்ஸான், பஞ்ச்,  மாருதி இ விட்டாரா, எம்ஜி விண்ட்சர் மற்றும் மஹிந்த்ராவின் XUV 3XO ஆகிய மின்சார கார் மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்ள உள்ளது.


Kia Syros EV: ஓடாத இன்ஜின்..! பேட்டரி ஆச்சும் தேறுமா? சைரோஸை மீண்டும் நம்பும் கியா? மின்சார எடிஷன் லாஞ்ச்?

சைரோஸின் ஓடாத இன்ஜின் எடிஷன்

கியா ப்ராண்டின் மிகச் சிறிய கார் மாடலாக கடந்த ஆண்டு உள்நாட்டு சந்தையில் சைரோஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. ரூ.8.99 லட்சத்தில் தொடங்கி ரூ.17.80 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பத்தில் விற்பனையிலும் இந்த கார் அசத்தியது. ஜனவரி 3, 2025ம் ஆண்டு காருக்கான முன்பதிவு தொடங்கியதுமே 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர். முதல் மாதத்திலேயே 5 ஆயிரத்து 546 யூனிட்கள் டீலர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஆனால், கடந்த ஜனவரி மாதத்தில் அந்த எண்ணிக்கையானது வெறும் 275 யூனிட்களாக சரிந்து, 5 ஆயிரத்து 271 சைரோஸ் யூனிட்களின் விற்பனையை கியா இழந்துள்ளது. அதாவது 95.04 சதவிகித வீழ்ச்சியை ஆண்டு விற்பனையில் பதிவு செய்துள்ளது. அதேநேரம், மாதாந்திர விற்பனையிலும் பின்னடைவை கண்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஆயிரத்து 116 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், ஜனவரியில் 75.36 சதவிகித சரிவை கண்டுள்ளது.


Kia Syros EV: ஓடாத இன்ஜின்..! பேட்டரி ஆச்சும் தேறுமா? சைரோஸை மீண்டும் நம்பும் கியா? மின்சார எடிஷன் லாஞ்ச்?

சைரோஸின் தோல்விக்கான காரணம் - EV காப்பாற்றுமா?

கியா ப்ராண்டின் வழக்கத்திற்கு மாறான டிசைன் மற்றும் எண்ட்ரி லெவல் காருகு அதிகப்படியான விலை ஆகிய சைரோஸின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. இதுபோக சைரோஸ் இடம்பெற்றுள்ள சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில், டாடா நெக்ஸான், மாருதி ப்ரேஸ்ஸா, ஹுண்டாய் வென்யு ஆகிய கார் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இன்ஜின் எடிஷன் அடிப்படையில் சைரோஸ் மின்சார எடிஷன் கார் மாடல் உருவாகி வருகிறது. இது கியா ப்ராண்டின் மதிப்பை காப்பாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Frequently Asked Questions

கியா சைரோஸ் மின்சார கார் எப்போது விற்பனைக்கு வரும்?

கியா சைரோஸ் மின்சார கார் நடப்பு ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதுகுறித்து தீவிரமான சாலை பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளது.

சைரோஸ் மின்சார காரின் எதிர்பார்க்கப்படும் ரேஞ்ச் எவ்வளவு?

லாங்க் ரேஞ்ச் பேட்டரி கொண்ட சைரோஸ் மின்சார கார், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 475 முதல் 500 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைரோஸ் மின்சார காரின் தோராயமான விலை என்னவாக இருக்கும்?

உள்ளூரில் சைரோஸ் மின்சார காரின் விலை 14 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

சைரோஸ் மின்சார காரின் உட்புறத்தில் என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கும்?

சைரோஸ் மின்சார காரின் உட்புறத்தில் 12.3 இன்ச் எச்டி டிஸ்பிளே, வெண்டிலேடட் இருக்கைகள், மற்றும் 64 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
வந்துட்டான்.. வந்துட்டான்.. அறிமுகமாகியது புதிய Bajaj Pulsar N160 S & N160 SS! விலை எவ்ளோ?
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget