மேலும் அறிய

Kannadasan and Vaali: யோவ் வாலி பின்னிட்ட போய்யா; மயக்கிய பாடல் - மதுவையே பரிசாக கொடுத்த கண்ணதாசன்!

வாலி எழுதி தன்னை மயக்கிய பாடலுக்கு, மதுவையே பரிசாக கொடுத்த ஆச்சர்யப்படுத்தினாராம் கண்ணதாசன்.

தன்னை பிரமிக்க வைக்கும் அளவிற்கு பாடல் எழுதிய கவிஞர் வாலிக்கு கண்ணதாசன் அவருக்கு பிடித்தமான பரிசாக விஸ்கியை பரிசாக அளித்த சம்பவம், தமிழ் சினிமாவில் 60, 70ஸ் காலகட்டத்தில் நடந்திருக்கிறது.

கவிஞர் வாலி:

அழகர்மலை கள்வன் படத்தின் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் பாடலாசிரியர் கவிஞர் வாலி. அதன் பிறகு சந்திரகாந்த், நல்லவன் வாழ்வான், இதயத்தில் நீ, கற்பகம், எதையும் தாங்கும் இதயம் என்று ஏராளமான படங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். இதே போன்று தான் கவிஞர் கண்ணதாசனும். மகாதேவி சிவகங்கைச் சீமை, மன்னாதி மன்னன், தாய் சொல்லை தட்டாதே, பாசம், பணத்தோட்டம் என்று ஏராளமான படங்களுக்கு 5000க்கும் அதிகமான பாடல்களுக்கு வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இப்படி இருவரும் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களது பாடல்களை மாற்றி மாற்றி பாராட்டிக் கொள்வது வழக்கம். அப்படி ஒரு படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடலுக்கு கண்ணதாசனே மயங்கி போய் அவரை பாராட்டி அவருக்கு பிடித்த விஸ்கியை பரிசாக கொடுத்தனுப்பினாராம். இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை.

கண்ணதாசன்:

ஜெமினி கணேசன், சரோஜா தேவி நடிப்பில் 1970 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் கண்மலர். விகே ராமசாமி தயாரித்த இந்தப் படத்தில் சௌகார் ஜானகி, வி நாகையா, நாகேஷ், அசோகன், விகே ராமசாமி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு கேவி மகாதேவன் தான் இசை. இந்த படத்திற்கு வாலி மற்றும் கண்ணதாசன் இருவரும் பாடல் எழுதி இருந்தார்கள். 

இதில், ஓதுவார் உன் பெயர் ஓதுவார் என்ற பாடலை வாலி எழுதியிருந்தார். இந்த பாடலை கேட்ட கண்ணதாசன், தனது உதவியாளரிடம் நான் இப்படியொரு எழுதினேன் என கேட்க அவர் வாலி பாடல் என கூறியதும், மொதெல்லா வாலிக்கு ட்ரங்க் கால் போட சொல்லி, யோவ் வாலி பின்னிட்ட போயா, உன்னோட இந்த பாடல் வரிகளில் நான் மயங்கி.. சொக்கி போய்விட்டேன் என எந்த ஒரு பாகுபாடும் இன்றி வாழ்த்தியுள்ளார்.

வாலிக்கு விஸ்கி பரிசு: 

வாலிக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என கண்ணதாசன் துடித்த நிலையில், சரி அவருக்கு பிடிச்ச விஸ்கியை வாங்கி கொடுக்கலாம் என முடிவெடுத்து அதையே வாங்கி தன்னுடையை டிரைவர் மூலம் கொடுத்தனுப்பினாராம். வாலிக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பது கண்ணதான் அறிந்த ஒன்று தான். ஆதலால் அவருக்கு விஸ்கியை பரிசாக கொடுத்து அனுப்பியிருக்கிறார். இந்த பாடலில்  "கங்கைகொண்டான் என்மேல் கருணை கொண்டான், என்று தொடங்கும் பாடல் வரிகளை தான் அதிகம் ரசித்தாராம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget