Puneeth Rajkumar Fan Suicide: புனீத் ராஜ்குமார் மறைவு: மனமுடைந்து தற்கொலை செய்த ரசிகர்!
பெங்களூரு: கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மறைவால் அவரது ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சி செய்யும்போது நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவையடுத்து புனீத்தின் உடல் கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரைத்துறையினர், அவரது ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். 5 கி.மீவரை அவரது ரசிகர்கள் இறுதி அஞ்சலிக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் புனீத் ராஜ்குமாரின் மறைவை தாங்கிக்க முடியாத அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்தவர் கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் என்பவர் ஆவார். அவருக்கு வயது 21.
இதற்கிடையே புனீத் ராஜ்குமார் மறைவு தந்த அதிர்ச்சியால் முனியப்பா மற்றும் பரசுராம் ஆகிய இரண்டு ரசிகர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
முன்னதாக, புனீத் ராஜ்குமார் சென்னையில் பிறந்தவர். தமிழில் வெளியான நாடோடிகள், போராளி உள்ளிட்ட படங்களின் கன்னட ரீமேக்கில் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகோடு தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்துவந்தவர்.
அவர் 6 மாத குழந்தையாக இருந்தபோதே குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானவர். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை 1985ஆம் ஆண்டு அவர் பெற்றார். நடிகராக மட்டுமின்றி பாடகராகவும், தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவர் பணியாற்றியவர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரணம் : நேரலையில் கண்ணீர்விட்டு கதறிய செய்தி வாசிப்பாளர்..
”ஜெயிக்கணும்னு நினைச்சா உங்க வாழ்க்கை ஒரு பாடம்..” புனீத் ராஜ்குமார் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்