மேலும் அறிய

Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரணம் : நேரலையில் கண்ணீர்விட்டு கதறிய செய்தி வாசிப்பாளர்..

கடுமையான ஒரு நெருக்கடி நிலையில், எல்லாவற்றை கேள்விக்குறியாக்கும் முடிவைக் காணும்போது, சூழ்நிலையை கவனிக்காமல் ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்துவான் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

புனீத் ராஜ்குமார் மரண அறிவிப்பு உறுதி செய்யப்பட்டதும்  நேரலையில் செய்தி வாசிப்பாளர் கண்கலங்கி, கதறியழுத சம்பவம் வைரலாக பரப்பப்படுகிறது ஏற்படுத்தியுள்ளது.  

கன்னட பவர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar) திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 46. 

Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரணம் : நேரலையில் கண்ணீர்விட்டு கதறிய செய்தி வாசிப்பாளர்..

முன்னதாக, புனீத்தின் உடல் நிலை குறித்து விக்ரம் மருத்துவமனையின் மருத்துவர் ரங்கநாத் நாயக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவலின்படி, நடிகர் புனீத் குமார் நெஞ்சுவலி காரணமாக இன்று காலை 11.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மருத்துவமனைக்குக் கொண்டுவரும்போதே அவரது நிலைமை மோசமாக இருந்ததார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது எனக் கூறியிருந்தார்.

தலைமுறை சந்திக்கும் சவால்:

இன்றைய தொழில்நுட்ப பகுத்திறவு உலகத்தில் பொதுவாகவே எல்லா செய்திகளும், நம் மனதில் ஒரே வகையான உணர்வுகளை ஏற்படுத்தத்தான் முயற்சிக்கின்றன.  செய்தி வாசிப்பவர்கள் தீபாவளி தொடர்பான செய்திகளுக்கு கொண்டாட்டம் போடுவது கிடையாது, விபத்து பலி செய்திகளில் அழுவதும் கிடையாது. புறநிலையில், அதாவது சொல்லப்படும் செய்திகளுக்கு வெளியில்தான் ஒவ்வொரு செய்தியும், செய்தி வாசிப்பவர்களும், அச்செய்தியை கேட்பவர்களாகிய நாமும் இருந்து வந்திருக்கிறோம்.  

உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பாக, வட இந்தியாவில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தனது கணவர் விபத்தில் இறந்த செய்தியை நேரலையில் உணர்ச்சிகளைக் காட்டாமல் வாசித்தார். தனிமனித வாழ்கையை பொருட்படுத்தாமல் அறிவுப்பூர்வமாக, புறவயமாக, தற்சார்பற்ற வடிவத்தில் செயல்பட்ட இவரின் செயல் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றது.   

இன்றைய தொழில்மய சமூகத்தில் என்றைக்கும் இல்லாத சவாலை மனிதன் சந்தித்து வருகிறான். மிகக் குறைவான வயதிலேயே மரணத்தின் வாசனையை நுகர வேண்டிய சூழல் எழுந்துள்ளது. மரணம் மிகவும் நிச்சயமற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் விளங்கி வருகிறது. இன்று காலை ட்விட்டரில் மகிழ்ச்சியாக ட்விட்டர் சமூக ஊடகத்தில் செயல்பட்டு வந்த  புனித் ராஜ்குமார் திடீரென உலகை விட்டு பிரிந்துள்ள சம்பவம் இந்த தலைமுறையின் சவாலை எடுத்துக்காட்டுகிறது.    

இந்த சவாலை எதிர்கொள்ள நம்மிடம் எந்த பதிலும் இல்லை என்பதையே செய்தி வாசிப்பாளர் நிர்பந்தமற்ற கண்ணீர் வெளிப்படுத்துகிறது. கடுமையான ஒரு நெருக்கடி நிலையில், எல்லாவற்றை கேள்விக்குறியாக்கும் முடிவைக் காணும்போது தன்னைத்தாண்டி ஒரு மனிதன் வெளிப்படுத்துவான் என்று கேட்டிருக்கிறீர்களா? அது உண்மையாகி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Rajinikanth Health: ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு..? - மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE:  பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Breaking News LIVE: பிரதமர் மோடி உரை - கூர்ந்து கவனிக்கும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Education Scholarship: முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
Embed widget