மேலும் அறிய

TN Weather Update: குளிருக்கு Bye Bye.! சுட்டெரிக்க ரெடியாயிடுச்சு சூரியன்; ரெடி ஆகுங்க; கோடை எப்போ தொடங்குது தெரியுமா.?

தமிழ்நாட்டில், வழக்கத்திற்கு மாறாக இவ்வளவு நாட்களாக பனி நீடித்து வந்த நிலையில், மார்ச் முதல் வாரத்தில் கோடை தொடங்கும் எனவும், இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு, தற்போது வரை பனி நீடித்து வருகிறது. இந்த வாரத்தில் பனி அதிகமாக இருந்தாலும், குளிர் சற்று குறைந்தே காணப்படுகிறது. ஏனென்றால், கோடை தொடங்க உள்ளது. ஆம், மார்ச் முதல் வாரத்தில் கோடை தொடங்கும் எனவும், இந்த ஆண்டு வெப்பம் அதிகமாகவும், நீண்ட காலம் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அது குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.

மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் கோடை

இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் என்று அழைக்கப்படும் ஹேமசந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வானிலை அமைப்பு குறித்தும், கோடை கால வானிலை மற்றும் அதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார். அதன்படி,

வானிலை அமைப்பு

வானிலை அமைப்பை பொறுத்தவரை, எல் நினோ (EL-NINO) அமைப்பு இந்தாண்டு அகட்டோபரில் உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும், மார்ச் முதல் மே மாதம் வரை பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை சமநிலையிலும் (Neutral), ஜூன் மாதம் முதல் படிப்படியாக எல் நினோ நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், அக்டோபர் 2026-ல் உருவாகும் எல் நினோ 2027 ஆம் ஆண்டு தீவிரமடையக்கூடும் எனவும் கூறியுள்ளார்.

அதோடு, 2020, 2021, 2022, 2024 & 2025 ஆகிய 5 ஆண்டுகள் லாநினா சார்ந்து இருந்த நிலையில், 2026 & 2027 எல் நினோ ஆண்டுகளாக அமைய இருப்பதாகவும், இதற்கு முன்பு குறுகிய கால எல் நினோ அமைப்பு 2023 அக்டோபர் முதல் 2024 ஏப்ரல் வரை நீடித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கோடைக்காலம் எப்படி இருக்கும்.?

தொடர்ந்து, 2026 கோடைக்காலம் கடந்த ஆண்டைவிட வெப்பமான ஆண்டாக அமையும் என்று கூறியுள்ள ஹேமசந்தர், மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களில், 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தும், 2 வாரங்கள் வெப்பச்சலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் நிலவக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரக்கூடிய நாட்களில், படிப்படியாக இரவு நேர குளிர் மற்றும் பனிப்பொழிவு விலகி, மார்ச் முதல் வாரம் முதல் முழுமையான கோடைக்காலம் துவங்கும் என்று கூறியுள்ளார். அதோடு, ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் வெப்பச்சலன இடிமழை துவங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் இந்தாண்டும் வெப்பத்தின் தாக்கம் மார்ச், ஏப்ரல் மாதங்களை விட மே, ஜூன் மாதங்களில் அதிகரிக்கும் என்றும், செப்டம்பர் இறுதி வரை வெப்பம் நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள்: 100 ரூபாய் பத்திரத்தில் அச்சிடப்பட்ட தவெக-வின் வாக்குறுதிகள்..!
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
‘வாயில் நுழையாத வட மொழி பெயர் ; வக்காலத்து வாங்கும் EPS’ கோபமான அமைச்சர் ஐ.பி..!
‘வாயில் நுழையாத வட மொழி பெயர்’ ஆவேசமான அமைச்சர் ஐ.பி..!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
சத்துணவா? விஷ உணவா? கோவை அரசுப்பள்ளி மாணவர்கள் 44 பேர் வாந்தி, மயக்கம்- அன்புமணி கண்டனம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget