மேலும் அறிய
Kanyakumari New Announcement : கன்னியாகுமரி மக்களுக்கு குஷி.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Kanyakumari new Announcement : தமிழக சட்டமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கன்னியாகுமரி மக்களை கவரும் வகையில் 6 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

stalin kanyakumari
Source : social media
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கன்கார்டியா பள்ளி மைதானத்தில் இன்று (25.02.2026) நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1785 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரக்கூடிய கன்னியாகுமரி நகராட்சியின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்ய, பழையாற்றிலிருந்து கூடுதல் குடிநீர் வழங்க 28 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், முக்கடலும் சங்கமிக்கும் இந்த பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
- குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், AVM கால்வாய் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- களியக்காவிளை கன்னியாகுமரி சாலையில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில், கோடி ரூபாய் செலவில் சாலைகள் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
- கல்குளம் வட்டம் முளகுமூட்டில் உள்ள பழம்பெரும் தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம், 2 கோடி ரூபாய் செலவில், அதன் பழமை மாறாமல் புணரமைக்கப்படும்.
- தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலமாக தற்போது மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நிதி உதவிகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான விரிவான அரசாணைகளையும் விரைவில் வெளியிடுவோம்.
- கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது, காணாமல் போகும் நேர்வில், காப்பீடு உள்ளிட்ட நிவாரணங்கள் கிடைக்கும் நாள் வரை அந்த மீனவர்களின் குடும்ப வாரிசுதாரருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகையாக மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























