மேலும் அறிய
Aalavandhan Re release: “கடவுள் பாதி, மிருகம் பாதி” பாடல் ரிலீஸ்.. காமிக்ஸில் மிரட்டும் ‘ஆளவந்தான்’ கமல்..!
ஆளவந்தான் படம் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீசாக உள்ள நிலையில், அனிமேஷனில் மாற்றியமைக்கப்பட்ட ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியானது.

கமல்ஹாசன்
Alavandhan Re release: கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும் ஆளவந்தான் படம் டிஜிட்டல் முறையில் ரீ-ரிலீசாக உள்ள நிலையில், அனிமேஷனில் மாற்றியமைக்கப்பட்ட ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படம் கடந்த 2001ம் ஆண்டு ரிலீசானது. இதில் ரவீனா டாண்டன், அனுஹாசன், பாத்திமா பாபு என பலர் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த ஆளவந்தான் படத்தில், கமல்ஹாசன் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்திருப்பார். பிரமிக்க அனிமேஷன் காட்சிகளும், கமல்ஹாசனின் அபாரமான நடிப்பும் இருந்தாலும் அந்த காலத்தில் ஆளவந்தான் படத்திற்கு பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று ஆளவந்தான் படத்தை டிஜிட்டல் வெர்ஷனில் வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு குறிப்பிட்டிருந்தார். அதன்படி டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்ட ஆளவந்தான் படம் டிசம்பர் 8ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த சூழலில் ஆளவந்தான் படத்தில் கமல்ஹாசன் நடித்த ‘கடவுள் பாதி, மிருகம் பாதி’ பாடலை அனிமேஷன் வெர்ஷனில் ரீமேக் செய்து கலைப்புலி தாணு வெளியிட்டுள்ளார்.
The iconic & much awaited #KadavulPaadhiMirugamPaadhi Lyric Video from #Ulaganayagan @ikamalhaasan's #Aalavandhan out now! 😎🔥https://t.co/sObiEIxFll@theVcreations @Suresh_Krissna @TandonRaveena @mkoirala @DOP_Tirru #KasiViswanathan @Shankar_Live @EhsaanNoorani pic.twitter.com/ywiFe74a0z
— Kollywoodtoday (@Kollywoodtoday) November 18, 2023
பழைய படத்தின் பாடலில் கடவுள் பாதி, மிருகம் பாதி... கலந்து செய்த கலவை நான் என்ற பாடலில் கமல் மட்டுமே நடித்து ரியாக்ஷன் கொடுக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். ஆனால் தற்போது டிஜிட்டல் முறையில் எடிட் செய்து வெளியிடப்பட்ட கடவுள் பாதி, மிருகம் பாதி பாடலின் லிரிக்ஸ் விடியோ காமிக்ஸ் மாடல் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. காமிக்ஸ் புத்தகங்களில் கலர் கலராக பாம்புகளும், புகைப்படங்களும் வருவது போல் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள டிரெண்டுக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் வெளியாகியுள்ள ஆளவந்தான் படத்தின் கடவுள் பாதி, மிருகம் பாதி பாடலை ரசிகர் டிரெண்டாக்கி வருகின்றனர்.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: வைல்டு கார்டு என்ட்ரிக்கு வந்த சோதனை.. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கானா பாலா!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement