மேலும் அறிய

Actor Karthi: 96 இயக்குநர், ஹெச்.வினோத்.. ஜப்பான் விமர்சனங்கள் தாண்டி மீண்டும் வலுவாகக் களமிறங்கும் கார்த்தி!

கார்த்தி நடித்த தீரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விரைவில் நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கார்த்தி

கார்த்தி நடித்து ராஜூ முருகன் இயக்கத்தில் உருவான ஜப்பான் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகியது. ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகர் கார்த்தி.

கார்த்தி 27

காதலும் கடந்து போகும், சூது கவ்வும் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி தற்போது கார்த்தியின் 26ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். ஏற்கெனவே முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான இரண்டாவது ஷெடியூல் நடைபெற இருக்கிறது.

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் திரைப்படங்களில் திரையரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படமாக இந்தப் படம் இருக்கும் என்பது திரைப்பட ஆர்வலர்களின் கணிப்பாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 96 படத்தை இயக்கிய இயக்குநர் பிரேம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் கார்த்தி. கார்த்தியின் 27ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் கார்த்தியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அரவிந்த் சாமி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க, பிற நடிகர்கள் குறித்த தரவுகள் வெளியாக இருக்கின்றன. பி.சி.ஸ்ரீராம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாகவும், 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

தீரன் அதிகாரம் இரண்டு

இந்தப் படங்களைத் தவிர்த்து கார்த்தி தீரன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றிபெற்றது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் 6 ஆண்டுகளை நிறைவு செய்த தீரன் படத்தை ரசிகர்கள் குறிப்பிட்டு நினைவு கூறினார்கள்.

இப்படியான நிலையில் தீரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தீரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை இயக்குநர் எச்.வினோத் கார்த்தியிடம் சொல்லியிருப்பதாக தெரியவந்துள்ளது.

தற்போது ஹெச்.வினோத் இயக்கிவரும் கமல்ஹாசனின் படங்களில் வேலைகள் முடிந்த கையோடு தீரன் இரண்டாம் பாகத்திற்கான முழுமையான திரைக்கதையை அவர் எழுத இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.

ஹெச்.வினோத்

சதுரங்க வேட்டை, வலிமை, தீரன், துணிவு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். சமூக பிரச்சனைகள் உள்ளோட்டமாய் அமைந்த கமர்ஷியல் படங்களை இயக்குவதை தனக்கான தனித்துவமாக உருவாக்கி இருக்கிறார் ஹெச்.வினோத். தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் 233ஆவது படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜட்டில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்கள் முன்பாக வெளியாகியது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்காக கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Kia Sorento: கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
கியா சொரெண்டோவ வாங்கலாமா, வேண்டாமா.? 3 சாதகங்களையும், 3 பாதகங்களையும் படிச்சுட்டு முடிவெடுங்க
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
Russia Attack Kyiv Bridge Video: உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
உக்ரைனின் கீவ் நகரில் நார்தர்ன் பிரிட்ஜை தாக்கிய ரஷ்யா; ட்ரோன் தாக்கி பாலம் புகை மண்டலமான வீடியோ வைரல்
Embed widget