Jr NTR on Japan: ஓட்டலில் தூய்மை பணியாளர் கொடுத்த பரிசு.. நெகிழ்ச்சியில் உறைந்த ஜூனியர் என்.டி.ஆர்.. வைரல் வீடியோ!
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் பரிசு ஒன்றை அவருக்கு கொடுத்துள்ளார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஹோட்டல் பணியாளர் ஒருவர் பரிசு ஒன்றை அவருக்கு கொடுத்துள்ளார்.
பாகுபலியின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட் ஆகியோரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உலக அளவில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் பின்னர் கடந்த மே 20 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அந்தப்படத்தை பல மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் ஜப்பானில் அந்நாட்டு மொழியில் வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
View this post on Instagram
இந்த நிலையில் அந்தப்படத்தை பிரோமோட் செய்யும் விதமாக, ராஜமெளலி, ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஜப்பானுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் ஜப்பானில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஜூனியர் என்.டி.ஆருக்கு அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர், ஜீனியர் என்.டி.ஆர் பற்றிய தனது நினைகள் மற்றும் தன்னைச்சார்ந்த வர்களுடைய நினைவுகளை ஒரு அட்டையில் எழுதி அவர் கையில் கொடுத்தார். இதனை வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர் அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி தெலுங்கு பிரின்ஸ் என ரசிகர்களால் அழைக்கப்படும் மகேஷ் பாபுவுடன் இணைய இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகமால் இருந்தது. இந்த நிலையில் கனடாவில் நடந்த டொராண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்ற இயக்குநர் ராஜமெளலி இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவர் பேசும் போது, “நான் அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைய இருக்கிறேன். அந்தப்படம் ஆக்ஷன் மற்றும் சாகசம் நிறைந்த படமாக இருக்கும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தப்படம் ஜேம்ஸ் பாண்ட், இந்தியானா ஜோன்ஸ் படங்கள் போல இந்திய கலாச்சாரத்தை உள்ளடக்கியதாக இருக்கும்” என்றார்
இந்தப்படம் குறித்து ராஜமெளலியின் தந்தை விஜேந்திரபிரசாத் பிங்க் வில்லா செய்தி நிறுவனத்திடம் பேசும் போது, “ உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கும் இந்தப்படம் ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது. ஆக்சன், த்ரில்லர், ட்ராமா என அனைத்தும் இந்தப்படத்தில் இருக்கும். இந்தப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.” என்று பேசியிருந்தார்.இந்த நிலையில் இந்தப்படத்தில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.