Watch Video: ஷாருக்கானை குத்தாட்டம் போட வைத்த அனிருத்.. ஜெயிலர் ஆடியோ லான்ச் விழாவை மிஞ்சிய ஜவான் ப்ரீ ரிலீஸ் விழா!
Jawan Pre Release Event : மற்ற மொழி படங்களை எடுப்பது என்பது கடினமான ஒன்று. பலரும் ரீ மேக் செய்வார்கள். ஆனால் நேரடியாக ஹிந்தி திரைப்படத்தை இதுவரையில் யாரும் எடுத்ததில்லை.
அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் - நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. விஜய் சேதுபதி, சஞ்சய் தத், தீபிகா படுகோன், பிரியா மணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் மூலம் இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி ஒன்றில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத் மேடை ஏறியவுடன் ஜவான் படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'வந்து இடம் என் காடு' என்ற பாடலுடன் பாடி தனது பேச்சை தொடங்கினார்.
அட்லீக்கு நன்றி :
கிங் கான் ஷாருக்கானையும் மேடைக்கு அழைத்து சென்று வந்த இடம் பாடலுக்கு நடனமாடினார். பின்னர் அட்லீ குறித்து அனிருத் பேசுகையில் "மற்ற மொழி படங்களை எடுப்பது என்பது கடினமான ஒன்று. பலரும் ரீ மேக் மூலம் அதை செய்வார்கள். ஆனால் நேரடியாக இந்தி திரைப்படத்தை இதுவரையில் யாரும் எடுத்ததில்லை. அட்லீ அவர் மட்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்காமல் என்னையும் அவருடன் அழைத்து சென்று விட்டார். மிகவும் நன்றி ப்ரோ. அட்லீ தனியாக செய்து இருக்கலாம். . இது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.
ஷாருக்கான் ஷாப்பிங் :
நானும் ஷாருக் சாரும் தினமும் ஒரு மணி நேரம் போனில் பேசுவோம். அதை இனியும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என அவரிடம் கேட்டுக்கொண்டார். நிறுத்தக் கூடாது சார். ஒருமுறை அவர் லண்டன் சென்றிருந்த போது என்னுடன் பேசிக்கொண்டே ஷாப்பிங் செய்தார். என்னுடைய ஷர்ட் சைஸ் எல்லாம் கேட்டார். எனக்காக ஷார்ட்ஸ் வாங்கி வந்தார். அவர் எப்போதும் என்னை அவருடைய டீமில் ஒருவராகவே பார்த்தார்” என கூறியுள்ளார் அனிருத்.
அனிருத் பேசிக்கொண்டே இருக்கும் போது அனைவரும் "லியோ லியோ" என கூச்சலிட்டனர். "அது அடுத்த மேடை" என அவர்களுக்கு பதில் அளித்தார்.
#JAWAN pre-release event🔥🔥🔥 #SRK dancing with #Anirudh HD video 🔥🔥🔥#JawanAudioLaunch #JawanTrailer #ShahRukhKhan #VijaySethupathi #JawanPreReleaseEvent #JawanPreRelease
— Vakugu (@vakugu) August 30, 2023
WELCOME TO CHENNAI KING SRKpic.twitter.com/aVChpuvagf
ஜவான் படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில் இன்னும் ஆல்பத்தில் நான்கு பாடல்கள் உள்ளன. பல தீம் ட்ராக்குகளும் உள்ளன" எனவும் அனிருத் பேசினார்.