Jailer First Single: ஊ அண்டாவாக்கு போட்டி... இணையத்தைக் கலக்கும் 'காவாலா...’ தமன்னா ஃபோட்டோ பகிர்ந்த படக்குழு!
சர்ப்ரைஸாக தமன்னாவின் நடனப் பாடலான காவாலா பாடல் முதல் பாடலாக வெளியாக உள்ளதாக அனிருத் - நெல்சன் காம்போ வீடியோவில் ஜாலி அப்டேட் பகிர்ந்தனர்.
நூ காவாலய்யா... ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலின் ப்ரோமோ வெளியானது முதல், இந்த வரிகள் தான் சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்!
ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான காவாலா நாளை (ஜூன்.06) வெளியாகிறது. இந்தப் பாடலின் ப்ரொமோ வீடியோ நேற்று முன் தினம் (ஜூன்.03) வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளியது.
தமன்னாவின் காவாலா... பாடல்
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் ஜெயிலர் படம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பிய நிலையில், ரஜினிகாந்த் பாடல் தான் முதல் பாடலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சர்ப்ரைஸாக தமன்னாவின் நடனப் பாடலான காவாலா பாடல் வெளியாக உள்ளதாக அனிருத் - நெல்சன் காம்போ வீடியோவில் ஜாலி அப்டேட் பகிர்ந்தனர். செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து பாடல்களின் ப்ரோமோவில் ஜாலியாக நடித்திருந்த அனிருத் - நெல்சன் இருவரும் இந்த ப்ரோமோ வீடியோவிலும் கலாய்த்து நடித்த நிலையில், இந்த வீடியோ வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், “காவாலா பாடலுக்கு நாளை மாலை 6 மணிக்குத் தயாராகுங்கள், கொஞ்சம் டான்ஸ் காவாலா” எனக் கூறி சன் பிச்சர்ஸ், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் தமன்னாவின் கலக்கலான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர்.
#VibeForKaavaalaa from 6pm tomo 🕺💃💥 #Kaavaalaa https://t.co/KCypIQIBio
— Anirudh Ravichander (@anirudhofficial) July 5, 2023
இந்த ஃபோட்டோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
ஊ அண்டாவாக்கு போட்டி
காவாலா எனும் தெலுங்கு வார்த்தையுடன் தொடங்கும் இப்பாடலின் ஒரு சில விநாடிகளே இந்த வீடியோவில் ஒலித்த நிலையில், இணையத்தில் இந்தப் பாடல் ட்ரெண்டாகத் தொடங்கியது.
மேலும் மீம் பேஜ்கள் இந்தப் பாடலை பல பாடல்களுடன் காட்சிகளுடன் சிங்க் செய்து பகிர்ந்த நிலையில், இணையதள சென்சேஷனாக இந்த வீடியோ மாறியது. மேலும் சமந்தாவின் ‘ஊ அண்டாவா’ பாடலைப் போல் இப்பாடல் பெரும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது. மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ் குமார், சுனில் என பல மொழி சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாஃபர், விநாயகன், யோகி பாபு, வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
ஜெயிலர் படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், முழுவீச்சில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி நாளை பாடல் வெளியாக உள்ளது.