தனுஷ் பட நடிகையுடன் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் காதல் ?...இத்தனை ஆண்டு வயது வித்தியாசமா
62 வயதுள்ள ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தன்னைவிட 26 வயது குறைவான ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸை டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது புதிய காதலியை பத்திரிகையாளர்கள் முன் அறிமுகம் செய்து அதிர்ச்சியை கிளப்பினார். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ள ஆமீர் கான் கெளரி ஸ்ப்ராட் என்பவரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். 60 வயதில் ஆமீர் கான் இளம் காதலர்களுக்கே சவால் விட்டு வருகிறார். ஆனால் ஆமீர் கானுக்கே சவால் விடும் ஒருவர் என்றால் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தான்.
டாம் க்ரூஸ் - அனா டி அர்மாஸ்
ஹாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான டாம் க்ரூஸ். இவருக்கு தற்போது 62 வயதாகிறது. ஆனால் இவரது வயதிற்கு தோற்றத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தோற்றத்தில் பார்க்க 30 வயது போல் தோன்றக்கூடியவர். இந்த வயதிலும் தான் நடிக்கும் படங்களின் ஸ்டன்ட் காட்சிகளை தானே நடித்து வருகிறார். ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்திற்கு தாவுவது , நீருக்கடியில் 9 நிமிடங்கள் மூச்சை பிடித்து இருப்பது , பறக்கும் விமானத்தில் தொற்றிக் கொண்ள்வது, பைக் ஓட்டிக் கொண்டே மலையில் இருந்து குதிப்பது என டாம் க்ரூஸின் சாதனைகளின் பட்டியல் பெரிது.
ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் டாம் க்ரூஸ். தற்போது பிரபல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸை அவர் டேட் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல பிரபல ஆளுமைகளுடன் காதல் உறவில் இருந்தவர் அனா டி அர்மாஸ். தனுஷ் நடித்த தி கிரே மேன் படம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கருதப்பட்டு இவரும் டாம் க்ரூஸும் சமீபத்தில் லண்டன் விமாண நிலையத்தில் சேர்ந்து காணப்பட்டார்கள்.
NEW
— Tom Cruise News (@TCNews62) March 15, 2025
TC at the Heliport with Ana de Armas. #TomCruise pic.twitter.com/1qoKf6abJ5
இதனால் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் காதலிக்கவில்லை என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது குறித்து இரு தரப்பில் இருந்து எந்த வித விளக்கமும் இதுவரை கொடுக்கப்படவில்லை.





















