![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Indo French Film Festival: சிறந்த நடிகை விருது வென்ற தமன்னா.. உதயநிதிக்கும் விருது.. குவியும் வாழ்த்துகள்..!
Indo French International Film Festival 2023 Winners: இந்திய - பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
![Indo French Film Festival: சிறந்த நடிகை விருது வென்ற தமன்னா.. உதயநிதிக்கும் விருது.. குவியும் வாழ்த்துகள்..! Indo French International Film Festival June 2023 Winners List Udhayanidhi Stalin Bags Best Producer Check Complete List of Winners Indo French Film Festival: சிறந்த நடிகை விருது வென்ற தமன்னா.. உதயநிதிக்கும் விருது.. குவியும் வாழ்த்துகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/09/8ea4b1fbc8156214974e4799393d7fb71688889572855572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய - பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘கண்ணே கலைமானே’ படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகை தமன்னா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தில் வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி கணேசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின், தமன்னா ஆகியோர் நடிப்பு பாராட்டைப் பெற்றது. இயற்கை விவசாயம் செய்யும் உதயநிதியும், வங்கி மேலாளரான தமன்னாவும் ஒரு கட்டத்தில் காதலித்து திருமணம் செய்கின்றனர். ஆனால் உதய் அப்பத்தாவாக வரும் வடிவுக்கரசி உடனான பிரச்சினையை தவிர்க்க, தம்பதியினர் இருவரையும் தனிக்குடித்தனம் வைக்கிறார். அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வு நடக்கிறது. அதிலிருந்து மீண்டார்களா என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் சீனு ராமசாமி.
இந்நிலையில் இந்திய - பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே’ படம் 3 விருதுகளை பெற்றுள்ளது. அதன்படி சிறந்த நடிகையான நடிகை தமன்னாவும், சிறந்த தயாரிப்பாளராக உதயநிதி ஸ்டாலினும், சிறந்த துணை நடிகையாக வடிவுக்கரசியும் இந்த விருதைப் பெறுகின்றனர். இதனையடுத்து ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இயக்குநர் சீனு ராமசாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாமன்னன்’ படத்தோடு சினிமாவில் இருந்து விடைபெறும் நடிகர் உதயநிதிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில், “தங்களின் சினிமாத்துறை விடைபெறுதலுக்கு எப்படி வாழ்த்து தெரிவிப்பது எனத் தெரியவில்லை, #நீர்ப்பறவை #கண்ணேகலைமானே என்று இன்றும் நாட்டுக்குள் இருக்கும் வீட்டுமக்களாலும், புதிய தலைமுறை இளைஞர்களாலும் கவனிக்கப்படும் திரைப்படங்களை இயக்க வாய்ப்புகள் தந்து, என் இனிய நினைவுகளுக்கு அன்பும் தந்த தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்” என பதிவிட்டிருந்தார்.
அதேசமயம் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் படத்துக்காக மராட்டிய மாநிலத்தில் பூனா தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் நடைபெற்ற 5வது குளோபல் இந்தியா பன்னாட்டு திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘சிறந்த நடிகர்’ விருது வழங்கப்பட்டதாகவும் அவர் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)