மேலும் அறிய

Job News: மருத்துவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..! ரூ.1 லட்சம் ஊதியம் - தகுதி, வயது வரம்பு - சலுகை விவரங்கள்

Medical Job Indian Army: இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 100 மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கு, மார்ச் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Medical Job Indian Army: இந்திய ராணுவத்தில் நிரப்பப்பட உள்ள 100 மருத்துவ அதிகாரிகள் பணியிடங்களுக்கு, 75 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்திய ராணுவத்தில் மருத்துவர் வேலை..

நாட்டிற்காக சேவை செய்ய விரும்பும் மருத்துவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் கீழ் மருத்துவ அதிகாரிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையை இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. குறுகிய சேவை ஆணையம் (SSC) மூலம் தகுதியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. MBBS பட்டம் பெற்ற தகுதியான ஆண் மற்றும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு,  100 மருத்துவ அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்காக ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறையானது,  பிப்ரவரி 21 அன்று தொடங்கிய நிலையில் மார்ச் 4ம் தேதி வரை வாய்ப்பு உள்ளது. 

விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு..

விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான join.afms.gov.in மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பட்டியலிடப்படும் நபர்களுக்கு நேர்காணல்கள் மார்ச் 2026 இல் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. கடைசி நேர தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்க்க, வேட்பாளர்கள் முன்கூட்டியே ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பக் கட்டண விவரங்கள்

பொது, ஓபிசி, பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள், எஸ்சி, எஸ்டி, பெண்கள், பிஹெச், மற்றும் பிடபிள்யூடி என அனைத்துப் பிரிவுகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் செயல்முறை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

காலியிட விவரங்கள்

மருத்துவ அதிகாரி பிரிவில் மொத்தம் 100 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக, 75 ஆண் மற்றும் 25 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தகுதி வரம்புகள்

எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற, நீட் முதுகலை தேர்வையும் எழுதிய நபர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். தேவையான கல்வித் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே அடுத்த கட்ட நடைமுறைக்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

வயது வரம்பு மற்றும் தேர்வு செயல்முறை

பணியிடங்களுக்கான வயது வரம்பு டிசம்பர் 31, 2026 நிலவரப்படி 18 வயது முதல் 30 வயது வரை ஆகும். அரசு விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். விண்ணப்பங்களின் குறுகிய பட்டியல் மற்றும் பின்னர் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு நடைமுறை இருக்கும். நேர்காணலுக்குத் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து, இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

ஊதிய விவரம்:

அடிப்படை ஊதியமாக சுமார் 61 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்படக்கூடும். இதுபோக ராணுவ சேவை, பயிற்சியாளர்கள் அல்லாதோருக்கான கொடுப்பனவு,வாடகை மற்றும் பயண கட்டுப்படி என அனைத்தும் சேர்த்து, மாதத்திற்கு சுமார் 95 ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரையிலும் ஊதியமாக வழங்கப்படலாம். இது போக பணியாளருக்கும் அவர் சார்ந்த குடும்பத்திற்கு இலவச மருத்துவ சேவைகள், கேண்டீன் உணவு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்,

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget