மேலும் அறிய

Maamannan: 'மாமன்னன் படத்தை வெளியிட்டால் தியேட்டர் அடித்து நொறுக்கப்படும்’.. மிரட்டல் வீடியோவால் பரபரப்பு...

மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்டால் அந்த திரையரங்கங்களை பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அடித்து நொறுக்குவோம் என வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்ட திரையரங்குகளில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்டால் அந்த திரையரங்கங்களை பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அடித்து நொறுக்குவோம் என வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனன் தயாரிப்பில் ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாதிய அரசியலை பேசும் படமாக இது இருக்கலாம் என படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் படம் தொடர்பான ப்ரோமோஷன்களில் எந்த சாதியையும் விமர்சித்து இந்த படம் எடுக்கப்படவில்லை என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் உள்ள திரையரங்கங்களில் மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என நெல்லையில் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக  இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது. 

அப்புகாரில் தென்தமிழகத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக திரைப்படம் எடுக்கும் மாரி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இத்திரைப்படத்தை வெளியிட்டால் தென் தமிழகத்தில் ஜாதி கலவரம் ஏற்படும், எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் கூறப்பட்டது. மேலும் அப்புகாரின் பேரில் 6 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் நாளை மாமன்னன் திரைப்படத்தை  வெளியிட காவல்துறை அனுமதிக்கக்கூடாது. இல்லையெனில் நெல்லை மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்கங்களை பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அடித்து நொறுக்குவோம் என அக்கட்சியின் தலைவர் பவானி வேல்முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதே போல தேனியிலும் மாமன்னன் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் மீறி திரையிட்டால் தியேட்டர் மீது தாக்குதல் நடக்கலாம் என்றும் பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget