SRK: நான் 106 வயசு வரை நடிக்கணும்.. 30 வருட சினிமா வாழ்க்கை குறித்து நெகிழ்ந்த ஷாருக்கான்..!
நடிகர் ஷாருக்கான் தான் 106 வயது வரை நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்.
![SRK: நான் 106 வயசு வரை நடிக்கணும்.. 30 வருட சினிமா வாழ்க்கை குறித்து நெகிழ்ந்த ஷாருக்கான்..! I Want to Work Till I am 106 Years Old SRK on His Special Insta Live SRK: நான் 106 வயசு வரை நடிக்கணும்.. 30 வருட சினிமா வாழ்க்கை குறித்து நெகிழ்ந்த ஷாருக்கான்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/26/bc35c20b28b61e4e88c4c6706363b5fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் ஷாருக்கான் தான் 106 வயது வரை நடிக்க விரும்புவதாக தெரிவித்து இருக்கிறார்.
திரைத்துறைக்கு வந்து 30 வருடங்களை நிறைவு செய்துள்ள ஷாருக்கான் ரசிகர்களுடன் முதன்முறையாக இன்ஸ்டாகிராம் லைவில் உரையாடினார். அப்போது பேசிய ஷாருக்கான் பதான் படத்தின் ட்ரெய்லரை நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம் என்று பேசினார். மேலும் சல்மான் கானை தனது சகோதரர் என்று குறிப்பிட்ட அவர் பலபிரபலங்கள் குறித்து பேசினார்.
View this post on Instagram
தொடர்ந்து பேசிய ஷாருக், “ கடந்து வந்த இந்த 30 வருடங்கள் ஏதோ நேற்றைய தினம் போல இருக்கிறது. நான் இன்னும் 30 வருடங்கள் இந்தத்திரைத்துறையில் இருக்க விரும்புகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் எனது 106 வயது வரை நடிக்க பார்க்க விரும்புகிறேன். மேலும் நடிப்பு மீதுள்ள தனது ஆர்வத்தைப் பற்றி பேசிய அவர், “ நான் ஒவ்வொரு படத்திற்கும் என்னில் பகுதியை கொடுக்கிறேன்.” என்று பேசினார்.
View this post on Instagram
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் ஷாருக்கானுடன், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல நடிகர் ஷாருக்கான் இயக்குநர் அட்லீ இயக்கும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)