மேலும் அறிய

Vijay warns Ministers | "ஊழல் வழக்குல சிக்குனா... பதவியில இருந்து தூக்கிருவேன்" எச்சரிக்கும் விஜய்

தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஊழல் முறைகேடு புகார்களில் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளில் சிக்கினால் உடனடியாக அரசு மற்றும் கட்சிப் பதவிகளை யாராக இருந்தாலும் பறித்து விடுவேன் என முதலமைச்சர் விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே திமுக ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். அதேபோல் தனது தலைமையிலான அரசு முற்றிலும் ஊழலற்ற, நேர்மையான அரசாகச் செயல்படும் என உறுதியளித்தார். அதிகாரத்தில் இருப்பவர்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் மக்கள் பணத்தையோ, அதிகாரத்தையோ தவறாகப் பயன்படுத்தக் கூடாது என ஆரம்பத்திலேயே கண்டித்தார். பொதுமக்களின் வரிப்பணம் ஒரு பைசா கூட வீணாகவோ அல்லது தவறான வழிகளிலோ கைமாறக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

ஆனால் தவெக ஆட்சி அமைந்த நிலையில் தவெகவினர் மாமுல் கேட்டு மக்களை தொந்தரவு செய்வதாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக தலைமைக்கு ஆதாரத்துடன் தகவல் சென்ற நிலையில் கட்சியை சேர்ந்த சிலர் நீக்கப்பட்டனர். அதனால் இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்க கூடாது என்பதற்காக அமைச்சர்கள், MLA-க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தனது சொத்து விவரங்களை தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேவைப்படும் போது அதில் தேவையான அப்டேட்டுகளையும் செய்யுமாறு விஜய் சொல்லியுள்ளதாக தெரிகிறது.  வேட்புமனு தாக்கலின் போது கொடுக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் உள்ள சொத்து விவரங்களையும் தற்போது கொடுக்கும் விவரங்களையும் வைத்து முறைகேடுகள் நடக்கிறதா என்பதை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர். 

அமைச்சர்கள், MLA-க்கள் என யாராக இருந்தாலும் ஊழல் முறைகேடு புகார்களில் சிபிஐ, அமலாக்கத்துறை வழக்கில் சிக்கினால் சற்றும் யோசிக்காமல் உடனடியாக அரசு மற்றும் கட்சிப்பதவியை பறித்துவிடுவேன் என விஜய் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் எந்த பாரபட்சமும் இல்லாமல் ஆக்ஷன் எடுப்பது உறுதி என்பதில் விஜய் தெளிவாக இருக்கிறாராம். தூய சக்தி என்ற அடையாளத்துடன் பிரச்சாரம் செய்த விஜய் ஆட்சியிலும் எந்த குறையும் வந்துவிடக் கூடாது என்று கவனமாக கையாள்வதாக சொல்கின்றனர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது
பள்ளியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல் !! ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்ட ஆசிரியை கைது
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
திருமணம் மறுப்பு: மானாமதுரையில் சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை; தந்தை, மகன் கைது !
சர்ச்சையாகும் போஸ்டர்... சிவகங்கையில் திமுகவிர் நிர்மல்குமார் குறித்து சுவரொட்டிகள்!
சர்ச்சையாகும் போஸ்டர்... சிவகங்கையில் திமுகவிர் நிர்மல்குமார் குறித்து சுவரொட்டிகள்!
இராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.51.5 கோடி திட்டம் மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும் !
இராமநாதபுரம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.51.5 கோடி திட்டம் மாவட்டத்திற்கு வளர்ச்சியை கொடுக்கும் !
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget