மேலும் அறிய

தேர்தலுக்கு முன் கடும் விமர்சனம்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. மீசை ராஜேந்திரன் அதிரடி!

அம்பாசமுத்திரத்தின் எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா தான் தவெகவில் இணைய முடிவெடுத்த நிலையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று என்னிடம் கேட்டார். நானும் மறுப்பேதும் தெரிவிக்காமல் தவெக்வி

என்னதான் முதலமைச்சர் விஜயை நான் விமர்சித்திருந்தாலும் நேரில் பார்க்கும்போது மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகரும், தவெக நிர்வாகியுமான மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

விஜயகாந்தின் தீவிர ரசிகராக இருந்தவர் நடிகர் மீசை ராஜேந்திரன். தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி தொடங்கி பல்வேறு விதமான கேரக்டர்களில் நடித்து மக்களிடம் பரீட்சையமாகி உள்ளார். இவர் அரசியலில் தேமுதிகவில் மிக தீவிரமாக செயல்பட்டார். அதன்பிறகு அதிமுகவிற்கு சென்ற அவர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் தவெகவில் இணைந்தது பற்றி மீசை ராஜேந்திரன் பேசியுள்ளார். 

அதில், “நான் கேப்டன் விஜயகாந்துடன் ரசிகர் மன்றம் தொடங்கி கட்சி வரை கிட்டதட்ட 32 ஆண்டுகள் பயணம் செய்திருக்கிறேன். அதன்பிறகு என்னுடைய பக்கத்து தொகுதியான அம்பாசமுத்திரத்தின் எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா தான் தவெகவில் இணைய முடிவெடுத்த நிலையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என்று என்னிடம் கேட்டார். நானும் மறுப்பேதும் தெரிவிக்காமல் தேமுதிகவில் அதிமுகவுக்கு சென்ற நேரத்தில் அங்கு ஒரே சண்டை, கலாட்டவாக இருந்தது. அதனால் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்து விட்டேன். 

அதிமுக ஒற்றுமையாக இருந்தால் வலுவாக இருந்திருக்கும் என்று நினைத்து தான் சென்றேன். அங்கு நடக்கும் பிரச்னைகள் இது நமக்கான சரியான பாதை இல்லை என்பதை உணர வைத்தது. நான் கட்சியில் சேர்ந்தது விஜய்க்கு நிச்சயம் தெரிந்திருக்கும். 

தேர்தலுக்கு முன் நான் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தேன். அது நான் இருந்த இயக்கத்துக்காக அப்படி செயல்பட வேண்டியதாகி விட்டது. விஜயகாந்தையும் விஜயையும் ஒப்பிட வேண்டாம் என தெரிவித்தேன். இப்போது தவெகவுக்கு வந்துவிட்டதால் அக்கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன். நான் தேமுதிகவில் இருந்து விலகிய பிறகு என்னை விமர்சித்து நிறைய பேர் மெசேஜ் அனுப்பினார்கள். விஜயகாந்த் சொன்ன மாதிரி அதை கடந்து போவதே சிறந்தது என நினைப்பேன். 

Also Read: குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி

நான் தவெகவுக்கு சென்றது நல்ல முடிவு என தேமுதிகவில் இருப்பவர்களே சொன்னார்கள். ஆனால் நடுவில் அதிமுக செல்லாமல் இருந்திருக்கலாம் என கூறினார்கள். முதலமைச்சர் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை. அது அவரின் விருப்பம் தான். இதே ஊடகங்கள் தான் விஜயகாந்தை படாதபாடு படுத்தினார்கள். அதன்பிறகு அவர் ஊடகங்களை பார்ப்பதை தவிர்த்தார். அதனால் விஜய் ஏதேனும் ஒரு சூழலில் ஊடகங்களை சந்திக்கலாம். 

நான் விஜயை கடுமையாக விமர்சித்தாலும் அவரை நேரில் பார்த்தால் மன்னிப்பு கேட்க மாட்டேன். விமர்சனம் என்பது அரசியலில் சகஜம் தான். நான் சீட்டுக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு வந்து விட்டதாக சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. எனக்கு எம்.எல்.ஏ., எம்.பி.யாக ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அது உடனே எல்லாம் நடக்காது. ஒரு கட்சிக்கு சென்றதும் பொறுப்பு கொடுப்பதே தாமதமாகும்” என மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget