மேலும் அறிய

Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!

ஐபிஎல் பட்டத்திற்காக ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் நேருக்கு நேர் மல்லுகட்டும் சூழலில் விராட் கோலி - முகமது சிராஜ் உணர்வுப்பூர்வமான மோதல் எப்படி இருக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆர்சிபி - குஜராத் அணிகள் மோதுகின்றனர். நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தை மீண்டும் தக்க வைக்கும் நோக்கத்தில் ஆர்சிபி அணியும், 2வது முறையாக பட்டம் பெறும் நோக்கத்துடன் குஜராத் அணியும் களமிறங்குகின்றனர்.

விராட் கோலி - முகமது சிராஜ்:

இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் பல்வேறு உணர்வுப்பூர்மான போட்டியாகவே அமைய உள்ளது. அந்த வகையில் இந்த போட்டியில் மிகவும் உணர்வுப்பூர்வமான தருணமாக விராட் கோலி - முகமது சிராஜ் ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முகமது சிராஜின் கிரிக்கெட் வாழ்க்கை இன்று உயர்ந்திருப்பதற்கு விராட் கோலி ஒரு முக்கிய காரணம் ஆவார். சன்ரைசர்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான முகமது சிராஜ் பின்னர் ஆர்சிபி அணிக்காக வாங்கப்பட்டு தவிர்க்கவே முடியாத வீரராக உலா வந்தார். வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டு ஆர்சிபி-யின் பந்துவீச்சு அடையாளமாக திகழ்ந்தவர்  முகமது சிராஜ்.

அண்ணன் - தம்பி:

குறிப்பாக, விராட் கோலியை தனது சொந்த சகோதரன் போலவே சிராஜ் தற்போது வரை கருதி வருகிறார். இந்திய அணியிலும் விராட் கோலி கேப்டன்சியின் கீழ் அறிமுகமான சிராஜ் நட்சத்திர பந்துவீச்சாளராக ஜொலித்து வருகிறார். இந்த சூழலில், கடந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் ஆர்சிபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை குஜராத் வாங்கியது.

கடந்தாண்டு நடந்த குஜராத் - ஆர்சிபி போட்டியில் விராட் கோலிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் பந்துவீச வந்த முகமது சிராஜ் ஒரு நிமிடம் தடுமாறியது அனைவரையும் நெகிழ வைத்தது. இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் கோப்பைக்காக இவர்கள் இருவரும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்க உள்ளது எப்படி இருக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு:

குஜராத்தின் பிரதான பந்துவீச்சாளராக முகமது சிராஜும், ஆர்சிபியின் ஆணி வேராக விராட் கோலியும் களத்தில் எப்படி விளையாடப்போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்றே கூறலாம்.

இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் இரு அணிகளும் பலமான அணியாகவே திகழ்கிறது. குஜராத் அணிக்கு இது சொந்த மைதானம் என்றாலும் ஆர்சிபி வீரர்களுக்கும் இங்கு ஏராளமான போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளது. 

குஜராத் அணியில் பேட்டிங்கில் சுப்மன்கில், சாய் சுதர்சன், பட்லர், ஹோல்டர், ராகுல் திவேதியா, ரஷீத், வாஷிங்டன் உள்ளனர். குறிப்பாக முதல் 3 பேரை நம்பியே அந்த அணி உள்ளது என்பது உண்மை. ஆர்சிபி அணியில் வெங்கடேஷ், விராட் கோலி, படிக்கல், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, குருணல் பாண்ட்யா, டிம் டேவிட், ஷெப்பர்ட் உள்ளனர். 

பந்துவீச்சிலும் குஜராத்தில் சிராஜ், ரபாடா, ஹோல்டர், ரஷீத்கான், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். ஆர்சிபியில் ஹேசில்வுட், புவனேஷ்வர், ரஷீக்சலார், டஃபி, சுயாஷ்சர்மா, குருணல் பாண்ட்யா, ஷெப்பர்ட் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!
Embed widget