மேலும் அறிய

EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி, இடைத்தேர்தலில் அதிமுக-வின் பலத்தை காட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மொத்த தமிழகத்தையும்  புரட்டிப்போடும் அளவிற்கு அமைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக படுதோல்வி அடைந்தாலும், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக-வே ஆகும்.

விரைவில் இடைத்தேர்தல்:

கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த அவர்கள், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழுந்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்த தேர்தலி்ல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக-வின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகம் தன் பக்கம் இழுத்துள்ளது. இதனால், தமிழ்நாடு திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்ந்து 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தவெக - திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி இழந்த தொகுதியுடன் சேர்த்து திருச்சி கிழக்கையும் கைப்பற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். ஆனால், கள சூழல் அதிமுக-விற்கு சாதகமாக இல்லாமல் இருப்பதாகவே கூறப்படுகிறது.

போட்டியிடுமா? தவிர்ப்பார்களா?

எதிர்தரப்பு எம்எல்ஏ-க்கள் பெரு்ம்பாலும் தன்வசம் வந்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவியை தக்கவைப்பதுடன் அதிமுக சட்டமன்ற தலைவராகவும் நீடிக்க உள்ளார். இந்த இடைத்தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று தனது இழந்த சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவதுடன் தனது தலைமைக்கு ஒரு சவாலாகவும் இதை எடுத்துச் செயல்படுத்த உள்ளார். 

கட்சியில் பல மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்ட்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால், பழைய நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவார்களா? புதியவர்கள் திறம்பட செயல்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திமுக இந்த தேர்தலை கண்டிப்பாக எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்து மேலும் கேள்வி எழும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழும் சூழலை தவிர்க்க வேண்டுமென்றால் இந்த இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி தவிர்க்கவும் வாய்ப்பு உண்டு.

உள்ளாட்சித் தேர்தல்:

தொடர் தோல்விகளால் அதிமுக துவண்டு வரும் சூழலில், இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதன்முறையாக தவெக களமிறங்க உள்ளது. உள்ளாட்சி அளவில் திமுக - அதிமுக பலமாக உள்ள நிலையில், அங்கு அதிமுக-வின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

மிகுந்த இக்கட்டான, நெருக்கடியான காலகட்டத்தில் சிக்கியிருக்கும் அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி எப்படி மீ்ட்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
மண், எம்-சாண்ட் தட்டுப்பாடு நிலவவுதாக கூறுவது பொய்யான தகவல் - அமைச்சர் டி.கே.பிரபு பேட்டி !
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்! ஒரே மேடையில் இணைந்த 42 கட்சிகள் - பின்னணி என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget