மேலும் அறிய

குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி

நடிகர் குமரி முத்து தான் எதிர்கொண்ட அவமானங்கள் குறித்து கூறுகையில் தான் அழுதுவிட்டதாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்

நடிகை ஊர்வசி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிமளா & கோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரைத்துறையில் நடிகர் நடிகைகள் உருவகேலி செய்யப்படுவது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவுடன் தனக்கேற்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார். 

உருவகேலி குறித்து ஊர்வசி

திரைத்துறையில் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் உருவகேலி செய்யப்படுவது குறித்து ஊர்வசி பேசினார். அப்போது அவர் "இன்று உருவகேலி செய்வதற்கு கொஞ்சமாவது தயங்குகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் ரொம்ப சகஜாமாக உருவ கேலி செய்வார்கள். குண்டா இருந்தால் குண்டன் தடியன் ,  நடை ஒருமாதிரி இருந்தால் நொண்டி என அழைப்பார்கள். நிறைய நடிகர்களின் மனைவிகளை நான் பார்த்திருக்கிறேன். நடந்து போகும்போது தங்களது உடலை மறைத்துக் கொள்வார்கள்"

குமரி முத்து சொன்னதை கேட்டு அழுதுட்டேன்

"முன்பெல்லாம் எனக்கு இந்த உருவகேலி பற்றி தெரியாது. மற்றவர்கள் கேலி செய்து பேசுவார்கள் நானும் சிரித்துவிடுவேன். குமரிமுத்து அண்ணனுடன்  ஒரு படத்தில் நடித்து வந்தபோது என்னை அவரைப் போலவே கண்களை வைத்து நடிக்க சொன்னார்கள். குமரிமுத்து ஐயா மாதிரியே நான் கண்களை வைத்து நடித்தேன். அந்த ஷாட் முடிந்ததும் எல்லாரும் கைதட்டி சிரித்தார்கள். அதன் பிறகு நான் குமரிமுத்து ஐயாவை பேட்டி எடுத்தேன். அவருடைய சின்ன வயது ஆசைகள் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் ' நான் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் படிக்க முடியல. போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என் கண்ணால அந்த வேல கிடைக்கல. டிரைவிங் கற்றுக்கொள்ள போனபோது நல்லா கண்ணு இருக்கவங்களே சரியா ஓட்டமுடியல இது வேற ஒன்ற கண்ண வச்சுட்டு வந்திருச்சுனு சொல்லிட்டாங்க . இப்டி சொல்லிக்கொண்டே வந்த அவர் நீ கூட ஒரு படத்துல என்ன மாதிரியே கண்ணு வச்சு நடிச்சல என்று சொல்லிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகி நான் வெளியே போய் அழுதுட்டேன். அதன் பிறகு இப்போ அந்த கண்ணு தான் எனக்கு சோறு போடுது என்று அவர் சொன்னார். அதன் பிறகு இனி ஒருபோதும் யாரையும் உருவகேலி பண்ண கூடாது என்று முடிவு பண்ணேன்" என்று ஊர்வசி பேசியுள்ளார் 

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget