மேலும் அறிய

Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்

Ukraine Robot Warriors: ரஷ்யா - உக்ரைன் போர் 4 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது போர்க்களத்தின் யுக்தியையே மாற்றியுள்ளது உக்ரைன். ஏற்கனவே ஏராளமான வீரர்களை இழந்த உக்ரைன் இப்போது ரோபோ வீரர்களை களமிறக்கியுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் தற்போது நான்கு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த போரில் தற்போது புதிய யுக்தியாக, ரோபோக்கள் மற்றும் ஆளில்லா இயந்திரங்களை களமிறகியுள்ளது உக்ரைன். இதன் காரணமாக ரஷ்யா அதிர்ச்சியடைந்துள்ளது.

ரோபோக்கள் எப்படி செயல்படுகின்றன.?

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான வீரர்களை இழந்துள்ளது உக்ரைன். இதைத் தொடர்ந்து, ஆளில்லா அமைப்புகளின் பயன்பாட்டை உக்ரைன் ராணுவம் விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது. போரில், அதிக அளவில் பதற்றம் நிலவும் எல்லைப் பகுதிகளுக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்வதற்காக ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வருகிறது.

இந்த ரோபோக்கள், எல்லைக்கு அப்பால் தோண்டப்பட்டுள்ள ஆழமான குழிகள் மற்றும் பலத்த கண்காணிப்பு நிலவும் ரஷ்யா எல்லைகள் வழியாக சென்று, இலக்கை அடைந்ததும், அதில் நிரப்பப்பட்ட வெடிபொருட்களை வெடிக்கச் செய்கின்றன.

அதோடு, இந்த ரோபோக்களை போர்க்களத்திற்கு பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்து, மனிதர்களால் சுலபமாக இயக்கி வழிநடத்த முடியும். இதன்மூலம், கணிசமான அளவில் ராணுவ வீரர்களின் உயிரிழப்புகளை தவிர்க்க முடியும் என உக்ரைன் கூறுகிறது. 

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுவது என்ன.?

இது குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த ஆண்டின் தொடக்கம் முதல், 22,000-த்திற்கும் அதிகமாக ஆளில்லா இயந்திரங்களை உக்ரைன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு ராணுவ வீரரைக் கூட போர்க்களத்திற்கு அனுப்பாமல், ரோபோக்கள் மற்றும் ட்ரோன்களை வைத்தே, ஒரு ரஷ்யா நிலையை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், போர் முனைகளில் வெடிபொருட்கள், உணவு, தண்ணீர் போன்றவற்றை கொண்டு செல்லவும், மோதலில் காயமடைந்த வீரர்களை அழைத்துச் செல்லவும், உளவுப் பணிகளை மேற்கொள்ளவும், ஆளில்லா ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

போர்க்களத்தில் திணறி வரும் ரஷ்ய வீரர்கள்

போரின்போது, ரஷ்ய வீரர்கள் உக்ரைனின் இந்த ஆயுதங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. மேலும், வெடிகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் இந்த ரோபோக்களுக்கு, ‘சைலண்ட் டெத்‘ என்று ரஷ்ய வீரர்களே பெயர் சூட்டியுள்ளதாக உக்ரைன் ராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.

இந்த ரோபோக்களும், இயந்திரங்களும் எந்தவித சப்தத்தையும் ஏற்படுத்தாமல் அமைதியாக நகர்வதால், சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு வந்த பிறகுதான், அவற்றின் சப்தத்தை ரஷ்ய வீரர்களால் கேட்க முடியும். ஆனால், இந்த தூரம் அபாய எல்லைக்குள் வந்துவிடும் என்று உக்ரைன் வீரர்கள் கூறுகின்றனர்.

இந்த ரோபோக்கள் மற்றும் ஆளில்லா இயந்திரங்கள் மூலம், மாதம் தோறம் சுமார் 35,000 ரஷ்ய வீரர்களுக்கு உயிரிழப்போ அல்லது காயத்தையோ ஏற்படுத்தும் இலக்கை உக்ரைன் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் போரில், சிறிய நாடான உக்ரைன், ஏராளமான உயிரிழப்புகளை சந்தித்துள்ளதால், இந்த புதிய யுக்தியை தற்போது கடைபிடிக்கிறது. இதனால், போரின் போக்கே தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஈரான் உடனான போரால், உக்ரைனுக்கான உதவிகளை அமெரிக்காவால் சரிவர வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை பயன்படுத்தி உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் இந்த முடிவால், ரஷ்யாவிற்கு பெருமளவில் பின்னடைவு ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Bullet Train: சீறிப்பாயும் புது புல்லட் ரயில்; வெறும் 5.3 நொடிகளில் 800 கி.மீ. வேகம்- உலக சாதனை!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget