Transgender Milla Interview: ஒரு பாலினத்தை அழித்து ஒரு பாலினத்தை உருவாக்கி இருக்கிறேன் - திருநங்கை மிலாவின் அசத்தல் பேட்டி
பிறக்கும்போதே திருநங்கை, திருநம்பி, தன் பாலின ஈர்ப்பாளர்கள் என யாரேனும் பிறக்கிறார்களா? பிறகு ஏன் தனித்தனியாக பிறக்க வேண்டும் - மிலா
நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிலா. இவர் ஒரு திருநங்கை ஆவார். 23 வயதாகும் மிலா பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர். மிலா ஒரு ஆடை வடிவமைப்பாளரும்கூட.
இவர் தற்போது தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது வாழ்க்கை குறித்தும், திருநங்கையாக மாறியது குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசிய மிலா, “ என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட விஷயத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அது என்னவென்றால் அனைத்தையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு உதாரணம் சொல்கிறேன். நான் இப்படி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.
நான் திருநங்கையாக மாறாமல் ஒரு பையனோடு சுற்றியிருக்கலாம். எங்கள் வீட்டாரிடம் யாராவது கேட்டிருந்தால் அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியிருப்பார்கள். ஆனால் நான் ஏன் அப்படி இருக்க வேண்டும். நான் நானாக இருக்க வேண்டும்.
Ellammal Padappai Guna | பாஜகவில் இணைகிறாரா, பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள்?
ஒரு பாலினத்தை அழித்து ஒரு பாலினத்தை நான் உருவாக்கியிருக்கிறேன். பிறக்கும்போதே திருநங்கை, திருநம்பி, தன் பாலின ஈர்ப்பாளர்கள் என யாரேனும் பிறக்கிறார்களா? ஏன் தனித்தனியாக பிறக்க வேண்டும்.
எங்களை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம். சராசரி தமிழ் பையன் ஒரு பெண்ணை எப்படி பார்த்துக்கொள்வானோ அப்படி பார்த்துக்கொண்டாலே போதும்.
தற்போது திருநங்கைகளை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. இந்த சமூகத்தில் எனக்கு மாற்றம் வரவில்லையென்றாலும் எனக்கு பிறகு வருபவர்களுக்காவது வரவேண்டும்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vanjam Theerthayada | ”ஊருணி நீரைப்போல் இளையராஜாவின் இசையை பருகினேன்” இசைஞானியுடன் இணையும் சுசிகணேசன்